இந்த டெக் யுகத்தில் அப்கள் தான் நம்மை ஆண்டு வருகிறது. whatsapp ல் கண்முழித்து Instagram பார்த்து விட்டு தூங்குகிறோம்.
இதில் உணவு இடைவெளியிலும் Swiggy, zomato போன்ற ஆன்லைன் உணவு ஆப்களை பயன்படுத்துகிறோம்.
இந்தியாவில் உணவு வர்த்தகத்தில் zomato தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.
குறிப்பாக தனது பிராண்டினை பொதுமக்களிடம் அடையாளப்படுத்துவதிலும் , ஞாபகப்படுத்துவதிலும் zomato சிறப்பான யுக்திகளை கையாண்டு வருகிறது.
Zomato தனது வியபாரத்தை 18-35 வயதுக்குட்பட்டவர்களிடம் மார்க்கெட்டிங் செய்கிறது.
இதற்காக பல்வேறு சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது மின்னஞ்சல் மார்க்கெட்டிங் முதல் குறுஞ்செய்திகள் வர பார்வையாளர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களை அதிகரிக்கும் விதமாக புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஒவ்வொரு மனநிலைக்கும் ஒரு அறிவிப்புகள்!
ஹாலோ பொன்னி! இன்னைக்கு என்ன ரொம்ப tired ஆ அப்படி என்று நோட்டிஃபிகேஷன் அனுப்பி Zomato தனது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்கிறது.
குறிப்பாக மீம்ஸ்கள் மூலமாக தனது உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.
பல ஆன்லைன் பிராண்டுகள் தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறது. ஆனால் ZOMATO தனது ஒரு வரி நகைச்சுவை வசனங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில், Zomato என்பது அதன் சேவைகளுக்கு மட்டுமின்றி, அதன் பெரிய வாடிக்கையாளர் தளத்துடன் தொடர்புகொள்வதற்காக பல வேலைகளை செய்கின்றது.
Zomato முதன்மையாக உணவு ஆர்டர் செய்யும் செயலியாகும். இது மெதுவாக பல பிரிவுகளில் அதன் சலுகைகளை பரப்புகிறது. Zomato முக்கியமாக உணவகங்கள் மற்றும் பிராண்டுகளின் விளம்பரங்களைப் பயன்படுத்தி வருவாயைப் பெறுகிறது.
Zomato உணவகங்களுக்கு வசூலிக்கும் கமிஷனில் இருந்து வருவாய் ஈட்டுகிறது.
Zomato அதன் சேவையை மார்க்கெட்டிங் செய்ய சொந்த இணையதளம் மற்றும் வலைப்பதிவு Twitter, Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள்,காட்சி விளம்பரங்கள் ,விளம்பர பலகைகள் தொலைக்காட்சி விளம்பரங்கள் ஆகியவற்றை பயனபடுத்துகிறது
அதே சமயம், சந்தையில் உள்ள போக்குகளை மேம்படுத்துவதிலும் அவற்றை பிராண்டுடன் தனித்துவமாக இணைப்பதிலும் Zomato கவனம் செலுத்துகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust