அலங்கார ஊர்தி

 

Twitter

இந்தியா

பொன்.ரதாகிருஷ்ணன் தரும் விளக்கம் : குடியரசுதின விழா அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு

குடியரசு தின விழா பேரணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 அலங்கார ஊர்திகளில் 9 ஊர்திகள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Antony Ajay R

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்வலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழக பாஜக -வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.


வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழாவில் மாநிலங்களின் பேரணி நடைபெறும். எல்லா மாநிலங்களும் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பல கலாச்சாரங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் இதில் பங்கேற்கும்.

முதல்வர்  ஸ்டாலின்

இந்த முறை தமிழகம் சார்பில் ராணி வேலுநாச்சியார், வஉசி, பாரதியார், மருது பாண்டியர்கள் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளைக் கொண்ட அலங்கார ஊர்வலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ராணி வேலுநாச்சியார், வஉசி போன்ற தலைவர்களைத் தேசிய அளவில் யாருக்கும் தெரியாது எனக் கூறி தமிழகத்தின் அலங்கார ஊர்வலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை தமிழக அதிகாரிகள் நேரில் ஆஜராகி அலங்கார ஊர்வலம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர். எனினும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இது குறித்து இன்று பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “டெல்லியில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

மோடி ட்விட்

குடியரசு தின விழா பேரணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 அலங்கார ஊர்திகளில் 9 ஊர்திகள் பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பலரும் எதிர்ப்பு குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சு.வெங்கடேசன்  ட்விட்

கடந்த ஜனவரி 3ம் தேதி ராணி வேலுநாச்சியார் பிறந்தநாளில் "வீரமங்கை ராணி வேலுநாச்சியார்" என குறிப்பிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்திருந்தார். அதே போல வஉசி பிறந்தநாளிலும் ஆங்கிலத்தில் அவரை நினைவு கூர்ந்து ட்விட் செய்தார். இப்போது அந்த தலைவர்களை யாருக்குமே தெரியாது என மத்திய அரசு கூறும் போது பிரதமருக்கு தெரிந்த தலைவர்களை கூடவா அதிகாரிகளுக்கு தெரியாது என்ற கேள்வி எழுகிறது.

மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், "தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ உ சி யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார் ? குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர் ! கோட்சேக்களையும் - கோல்வார்க்கர்களையுமா ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?