Ranil Wickramasinghe Twitter
இந்தியா

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் : நெருக்கடியான சூழலில் கூடும் நாடாளுமன்றம் - என்ன நடக்கிறது?

NewsSense Editorial Team

இலங்கை: கடும் நெருக்கடியான சூழல்- நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டுத் தப்பியோடினார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில் இன்று எம்.பி-க்கள் கலந்துகொள்ள கூட்டம் கூடுகிறது. வருகிற 20-ம் தேதி நாடாளுமன்றத்தின் மூலம் புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் எனவும் இதற்கான வேட்புமனுக்கள் 19-ம் தேதி பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lankan Parliament

செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமர் மோடியைச் சந்தித்து அழைப்பு விடுக்கும் முதல்வர் ஸ்டாலின்


44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28 முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உட்பட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட்ஸ் அரங்கத்தில் இந்தப் போட்டிக்கென பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் போட்டியில் பங்கேற்க வருபவர்களைக் கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் தீவிரமாகக் கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையின் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடிக்கு 19-ம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

MK Stalin meets PM Modi

பலத்த சூறாவளி காற்று: கீழக்கரை ஏர்வாடி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லத் தடை

கடந்த சில தினங்களாகவே வழக்கத்திற்கும் மாறாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால், கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதியிலும் சூறாவளி வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கீழக்கரை மற்றும் ஏர்வாடி பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் வரிசையாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Fishing ban

கேரளா: குரங்கு அம்மை பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை


ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்குக் கொல்லம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதையொட்டி கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், "கடந்த 12-ம் தேதி, பாதிக்கப்பட்ட நபருடன் ஆலப்புழை, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தணாம்திட்டா, ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகப் பயணம் செய்து வந்துள்ளனர். அந்த மாவட்டங்களில் சிறப்பு உஷார் நிலை அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Monkey Pox

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?