இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும் மத வழிபாட்டையும் கொண்டுள்ளது. வரலாற்று சின்னங்கள் தொடங்கி பழங்கால கோவில்கள் வரை பார்க்க அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
இன்று ஒரு பழமையான அதிசய கோவில் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பழமையானது சரி அது என்ன அதிசய கோவில் என்கிறீர்களா? இந்த சிவன் கோவில், ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போகுமாம்.
ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் என்ற கோவில் குஜராத்தில் அமைந்துள்ளது. லாஸ்ட் டெம்பிள் என்றும் அழைக்கப்படும் இந்த கோவில் தொலைதூரத்தில் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது.
தாரகாசுரன் என்ற அரக்கனை ஒழித்த பிறகு, கார்த்திகேய பகவான் தலைமையிலான தெய்வங்கள் இந்த ஸ்தம்பேஸ்வர மகாதேவ் லிங்கத்தை நிறுவியதாக நம்பப்படுகிறது.
தாரகாசர் ஒரு அரக்கனாக இருந்தாலும், சிவபெருமானின் சிறந்த பக்தராக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவரைப் பிரியப்படுத்த அவர் கடுமையான தவம் செய்தார்.
இவரது தவத்தினால் மனம் நெகிழ்ந்த சிவபெருமான் இவருக்கு வரம் அருள முன்வந்தார்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் மரணம் தவிர்க்க முடியாதது என்பதால், சிவபெருமான் அவரிடம் வேறு வரம் கேட்கச் சொன்னார்.
இதற்கு புத்திசாலிதனமாக யோசித்து சிவபெருமானின் 6 வயது மகனை தவிர்த்து யாரும் தன்னை கொல்லக் கூடாது என்ற வரத்தை பெறுகிறார்.
பிறகு தாரகாசுரன் தன்னை யாரும் அழிகக முடியாது என்ற கர்வத்தில் மூவுலகங்களிலும் பல அட்டூழியங்கள் செய்து, துன்புறுத்துகிறான்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணின் சுடரில் இருந்து கார்த்திகேயனை உருவாக்கினார். தாரகாசுரனை கார்த்திகேய பகவான் தண்டித்ததாக புராணங்கள் சொல்கிறது.
கடலோரத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவில் அதிக அலைகளின் போது நீரில் மூழ்கி, குறைந்த அலையில் மீண்டும் தோன்றும்.
பகலில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்வதால், தண்ணீரில் மறைந்து மீண்டும் கோவில் வெளிப்படுகிறது. பதிவுகளின்படி, கருவறை முழுவதும் கடல் நீரால் மூடப்பட்டிருக்கும், கோவில் கட்டமைப்பின் மேற்பகுதி மட்டுமே தண்ணீருக்கு மேல் இருக்குமாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust