fail canva
இந்தியா

ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்த மாணவர்கள்; வைரலான வீடியோ- என்ன காரணம்?

Keerthanaa R

குறைவான மதிப்பெண் அளித்ததற்காக ஆசிரியர்களை அரசு பள்ளி மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ, கடுமையாக திட்டவோ, தண்டிக்கவோ கூடாது. இது சட்டப்படி குற்றமாகவும் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் தவறிழைத்தால், அதனை சுமுகமாகக் கையாள ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா என்ற இடத்தில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றதால், அவர்களது ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவி பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில் மேலும் திடுக்கிடும் தகவல் வெளியானது. மாணவர்களுக்குக் குறைவான மதிப்பெண் அளித்த ஆசிரியர் மற்றும் பள்ளியின் கிளர்க் இருவரையும் மரத்தில் கட்டிவைக்க உத்தரவிட்டது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்கள் குறைந்த மதிப்பெண்ணை வழங்கியதால் தான் நாங்கள் பரிட்சையில் தோல்வியடைந்தோம் என புகாரளித்துள்ளனர்.

மேலும், ஏன் குறைந்த மதிப்பெண் அளித்தீர்கள் என்ற கேள்விக்கும் அவர்கள் விளக்கமளிக்காததால் தான் இவ்வாறு செய்ததாக மாணவர்கள் கூறியதாக வட்டாரக் கல்வி விரிவாக்க அலுவலர், சுரேந்திர ஹெப்ராம் கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர், மாணவர்கள் தங்களை மீட்டிங் இருக்கிறது என்று அழைத்துச்சென்று, மதிப்பெண் குறித்த விவகாரத்தை முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததற்குக் காரணம், செயல்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் தியரி மார்க்குடன் சேர்க்கப்படாதது தான் எனக் கூறினார். அதனை செய்யவேண்டியது தலைமை ஆசிரியர் தான் எனவும், அது தங்கள் பொறுப்பல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களை மாணவர்கள் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக 11 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?