இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன. 2000ம் ஆண்டு நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தில் முதல் 1 % மக்கள் அடையும் அளவு 22.6 விழுக்காட்டில் இருந்து 40.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இவர்கள் சொத்து மதிப்பின் சராசரி
இந்த ஏற்றத்தாழ்வு கடந்த 2014-15 மற்றும் 2022-23 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தைச் சேர்ந்த குழு மேற்கொண்ட இந்த ஆய்வுக்கு இந்தியாவில் வருமான மற்றும் செல்வ சமத்துவமின்மை, 1922 - 2023 : பணக்காரர்கள் ராஜாங்கத்தின் எழுச்சி - Income and Wealth Inequality in India, 1922-2023: The Rise of the Billionaire Raj எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்த அளவு அதிக செல்வத்தை 1% மக்கள் மட்டும் அனுபவிக்கும் நாடு இந்தியா மட்டும் தான்.
இந்த ஆய்வின் ஆசிரியர் Thomas Piketty (Paris School of Economics), "இந்தியாவின் பணக்காரர்களுக்கும் பொது மக்களுக்கும் இருக்கும் பொருளாதார இடைவெளி பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இருந்ததை விட அதிகமாகியிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றார். அதன் பிறகு ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி வேகமாக அதிகரித்திருக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் நாட்டின் பெரும் பணக்காரர்களுடன் பாஜக தலைவர்கள் நெருக்கமாக இருப்பதை தொடர்ந்து குறிப்பிட்டு பேசிவருகிறது.
இந்த மோசமானநிலையை அடைந்ததற்கு நாட்டின் எல்லா வர்க மக்களுக்கும் கல்வி சென்று சேராததே காரணம் எனக் கூறப்படுகிறது. கல்வித் தகுதி இல்லாததால் பெரும்பகுதி மக்கள் குறைவான வருமானம் ஈட்டும் வேலைகளையேச் செய்து வருகின்றனர்.
கடைசி 50 விழுக்காடு மக்கள் நாட்டின் 15% செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கின்றனர். இந்தியர்களின் நிகர செல்வம் அடிப்படையில் நோக்கும் போது இந்தியாவின் வருமானவரித்துறை அமைப்பு இந்த மோசமான நிலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust