பொதுவாக கோடை காலத்தில் சுற்றுலா செல்ல பல பிளான்களை செய்வோம். அடிக்கிற வெயிலுக்கு நல்ல இதமான குளுகுளுவான இடத்திற்கு செல்ல வேண்டும் என கூகுளில் தேடிக் கொண்டிருப்போம்.
அதுவும் நம்மளுக்கு ஏற்ற பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என எண்ணுவோம்.
அப்படி ஒரு இடத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். வெறும் 80 ரூபாய் இருந்தால் இந்த குட்டி தீவுக்கு நீங்கள் செல்லாம். எங்கே இருக்கிறது அந்த இடம்?
கேரளத்தின், அலப்புழா மாவட்டத்தின், முஹம்மாயில் இருக்கும் இடம் தான் வேம்பநாடு ஏரி.
மேற்கு வங்காள சுந்தரவனக் காடுகளுக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஈரநில தளமாக உள்ள இந்த ஏரி முழுக்க தண்ணீர் தானே இருக்க போகிறது? இதில் என்ன புதிதாக இருக்கக்கூடும் என்று தானே யோசிக்கிறீர்கள்.
இருக்கிறது! உங்களை மெய்மறக்க செய்யும் கண்கவர் தீவு ஒன்றை நீங்கள் காணலாம்.
வேம்பநாடு ஏரிக்கு நடுவே சுமார் 20 ஹெக்ட்டேர் நிலப்பரப்பில் பாதிராமணல் என்ற ஒரு சிறிய தீவு உள்ளது.
முன்பு அனந்தபத்மநாபன் தோப்பு என்று அழைக்கப்பட்ட இந்த தீவு தனியார் நிலமாக இருந்தது. பின்னர் அது அரசுடைமையாக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஏரிக்கு நடுவே இருக்கும் இந்த தீவில் சுமார் 150 வகையான பறவைகளை காணலாம். இது பறவை ஆர்வலர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. பாதிராமணல் என்ற சொல்லுக்கு 'இரவின் மணல்' என்று அர்த்தம்.
இந்த தீவுக்கு எப்படி போவது என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது.
அருகில் இருக்கும் முகம்மா படகு இல்லம், ஆழப்புழா , குமரகம் ஆகிய இடங்களில் இருந்து 30 நிமிடம் முதல் ஒன்றரை மணி நேர படகு பயணத்தின் மூலம் இந்த தீவை அடையலாம்.
இந்த படகு பயணத்தின் குறைந்தபட்ச விலை வெறும் 80 ரூபாய் தான். தீவுக்கு சென்ற பின்னர் 1 மணி நேரம் அங்குள்ள இடங்களை எல்லாம் பார்த்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பலாம்.
முகமாவிலிருந்து காலை 10:30 மற்றும் 11:45 மணிக்கு ஏறினால் பாதிராமணலில் இறங்கலாம். ஒரு மணி நேரம் கழித்து, பயணிகள் முகம்மா திரும்பலாம்.
வேம்பநாடு ஏரிக்குள் இருக்கும் இந்த தீவிற்கு அருகிலுள்ள ரயில் நிலையம், ஆலப்புழா, சுமார் 16 கி.மீ. அருகிலுள்ள விமான நிலையம், ஆலப்புழாவில் இருந்து வடக்கே சுமார் 85 கி.மீ தூரத்தில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust