கன்னியாகுமரி டு ஒடிசா: இந்தியாவின் 5 அழகிய சன்செட் பாயிண்ட்ஸ்! twitter
இந்தியா

கன்னியாகுமரி டு ஒடிசா: இந்தியாவின் 5 அழகிய சன்செட் பாயிண்ட்ஸ்!

சூரியன் உதிப்பதையும், அஸ்தமனமாவதையும், குறிப்பிட்ட இடங்களிலிருந்து நாம் கண்டு ரசிக்கலாம்.இந்தியாவில் சன் ரைஸ் பாயிண்ட் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது கன்னியாகுமரி தான். அப்படி இந்தியாவில் சன்செட் எங்கெல்லாம் தென்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Keerthanaa R

இயற்கை பல அழகுகளையும் அதிசயங்களையும் கொண்டது. வண்ணமையமான பூக்கள், பச்சை பசேல் என்ற மரங்கள் தாவரங்கள், அரிதான பல வகையான பறவை மற்றும் விலங்கினங்கள் என இயற்கையின் அழகை விவரித்துக்கொண்டே போகலாம்.

அதிகாலை சூரியன் உதிப்பது முதல் மாலை அஸ்தமனமாகும் வரை, ஒவ்வொரு அசைவும் மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு நடக்கிறது.

சூரியன் உதிப்பதையும், அஸ்தமனமாவதையும், குறிப்பிட்ட இடங்களிலிருந்து நாம் கண்டு ரசிக்கலாம்.இந்தியாவில் சன் ரைஸ் பாயிண்ட் என்றால் முதலில் நமக்கு தோன்றுவது கன்னியாகுமரி தான்.

அப்படி இந்தியாவில் சன்செட் எங்கெல்லாம் தென்படும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

தி ஹிட்டன் ட்வின் பீச், கன்னியாகுமரி

அதன் பெயருக்கு ஏற்றவாறு இந்த கடல் கன்னியாகுமரியிலிருந்து 2.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பரந்து விரிந்த கடல், அவ்வப்போது பாறைகளின் மேல் வந்து மோதிச்செல்லும் சிறிய அலைகள், அதிக ஆள் நடமாட்டம் இல்லாத சூழ்நிலை, நம் மனதை அமைதிப்படுத்துகிறது.

கடற்கரையில் அமர்ந்து இங்கு நீங்கள் சூரியன் மறைவதை கண்டு களிக்கலாம்

ராதாநகர் பீச் , அந்தமான்

ஆசியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படும் ராதாநகரில் சூரியன் மறைவதை நாம் காணலாம். அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம், இவ்விடத்தை காண சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இது தவிர இங்கு ஸ்கூபா டைவிங் போன்ற தண்ணீர் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம்

அலப்பி பீச், கேரளா

கேரளாவில் நீர்நிலைகள் அதிகம். இங்குள்ள பேக் வாட்டர்கள் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இதையும் தவிர, இங்குள்ள அலப்பி கடற்கரை சூரியன் மறைவதை காண மற்றுமொரு சிறந்த இடமாகும்.

பலோலெம் பீச், கோவா

கோவா சுற்றுலாவின் நகரம். “இந்த வருஷமாச்சும் கோவா போறோம் டா” என்று நாம் இன்றுவரை நண்பர்களுடன் ப்ளான் போட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். இங்குள்ள பலோலெம் கடற்கரையில் சன்செட்டை காணலாம்.

பூரி பீச், ஒடிசா

ஒடிசாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பூரி பீச்சில் சூரியன் மறைவதை பார்க்க இரண்டு கண்கள் போதாது. சூரியனின் மென் கிரணங்கள் அலையாடும் கடலின் மேல் விழுகும் போது தோன்றும் நிறமானது, அச்சூழலையும், நம் மனதையும் அமைதியாக்குகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?