Swiggy : 3.5 லட்சம் பிரியாணி, 61000 பீட்சா - New Year இரவில் ஸ்விக்கி செய்த சாதனை!
Swiggy : 3.5 லட்சம் பிரியாணி, 61000 பீட்சா - New Year இரவில் ஸ்விக்கி செய்த சாதனை! Newssense
இந்தியா

Swiggy : 3.5 லட்சம் பிரியாணி, 61000 பீட்சா - New Year இரவில் கல்லாகட்டிய டெலிவரி நிறுவனம்

Antony Ajay R

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி புத்தாண்டு தினத்திற்கு முந்தைய இரவு 10:25 மணிக்கு 3.5 லட்சம் பிரியாணிகளை டெலிவரி செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 61,000 பீட்சாக்களையும் மக்கள் வாங்கியுள்ளனர்.

அதிக வாடிக்கையாளர்களுன் டாப் செல்லிங்க் உணவாக விளங்குகிறது பிரியாணி.

இரவு 7:20 மணிக்கு 1.6 லட்சம் பிரியாணிகள் விற்பனை ஆனதாகவும் பிடிஐ செய்திதளம் கூறியுள்ளது.

பிரியாணியின் சுவைக்கு இந்தியர்களின் நாக்குகள் அடிமை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது இந்த தகவல்.

ஸ்விக்கி நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், "டாமினோஸ் இந்தியா 61,000 பீட்சாக்களை டெலிவரி செய்துள்ளது. இந்த அளவு பீட்சாவுடன் கொடுக்கப்படும் oregano பாக்கெட்களை தான் கற்பனை செய்ய முடியும்." என கூறியிருந்தது.

சனிக்கிழமை இரவில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் 7 லட்சம் சிப்ஸ் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுளதாகவும் தகவல்கள் கூறியுள்ளது.

புத்தாண்டு இரவில் 2757 ஆணுறைகளும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவில், "இது வரை 13 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளோம். இன்னும் செய்துகொண்டிருக்கிறோம்" என ஸ்விக்கி முதன்மை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி ட்விட்டரில் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு யாருக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறதோ தெரியவில்லை. ஸ்விக்கிக்கு லாபகரமானதாக தொடங்குகியிருக்கிது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?