Swiggy Twitter
இந்தியா

Swiggy: வெறும் காலில் சென்று உணவு டெலிவரி செய்த ஊழியர்- மனதை நெருடிய காரணம்

Keerthanaa R

காலணிகள் எதுவும் அணியாமல் வெறும் காலில் சென்று உணவு டெலிவரி செய்து வருகிறார் ஸ்விக்கி ஊழியர் ஒருவர். 

சமீபத்தில் வீல் சேரில் அமர்ந்தபடி உணவு டெலிவரி செய்யும் ஒருவரின் வீடியோ பெரும் கவனத்தை பெற்றது. சொமேட்டொ ஊழியர் ஒருவருக்கு உதவிய ஸ்விக்கி ஊழியர், மழையில் நனைந்தபடி உணவு டெலிவரி செய்வதற்காக சிக்னலில் காத்திருந்த ஊழியர் என,பல சந்தர்ப்பங்களில் மக்களின் மனதை வென்றிருந்தனர் ஸ்விக்கி சொமாட்டோ ஊழியர்கள். 

அந்த வகையில் இங்கு ஒரு ஸ்விக்கி ஊழியர் வெறும் காலில் சென்று உணவு டெலிவரி செய்திருக்கிறார். உணவை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர் இதை பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன கதை மனதை நெருடும்படி செய்துள்ளது. 

தாரிக் கான் என்ற அந்த நபர், தன் LinkedIn தளத்தில் இந்த கதையை பகிர்ந்திருந்தார். தாரிக் கான் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவரது உணவை டெலிவர் செய்ய வந்த ஸ்விக்கி ஊழியர் காலணிகள் எதுவும் அணியாமல், வெறும் காலில் வந்ததாக தெரிகிறது.

இதை கவனித்த தாரிக் அந்த ஊழியரிடம் காரணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் தனக்கு காலில் அடிப் பட்டதனால் சுளுக்கு ஏற்பட்டு வீங்கி இருப்பதாகவும், இதனால் அவர் காலணிகள் அணியமுடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். 

அப்போது தாரிக் "எனில் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும், வேலை பார்க்கக்கூடாது" எனக் கூறியிருக்கிரார். அதற்கு ஸ்விக்கி ஊழியர், "என்னை நம்பி தான் என் குடும்பம் இருக்கிறது" என புன்னகையுடன் தெரிவித்திருக்கிறார்.

தாரிக், "இவரை போன்ற நபர்கள் தான் நான் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும் என்பதை எனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றனர்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். 

தாரிக் இந்த அனுபவம் குறித்து  பகிர்ந்ததிலிருந்து அந்த ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த ஊழியருக்கு ஸ்விக்கி நிறுவனம் தக்க சன்மானாம் அளித்தால் நன்றாக இருக்கும் எனவும் தாரிக் குறிப்பிட்டிருந்தார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?