வைரல் புகைப்படம் Twitter
இந்தியா

இராணுவ வீரர்கள் நமாஸ் செய்யும் புகைப்படம் : "இது தான் இந்தியா" - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

Antony Ajay R

இந்திய இராணுவ சிறப்புப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே மற்ற இராணுவ வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் இணைந்து நமாஸ் செய்யும் புகைப்படம் வெளியாகி நெட்டிசன்களின் மனதை வென்றிருக்கிறது.

ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு வெளியான அந்த புகைப்படத்தில் தளபதியுடன் சீக்கிய அதிகாரிகளும் இதர வீரர்களும் இருந்தனர்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை உணர்த்தும் இந்த புகைப்படம் இணையவாசிகளின் மனதை வென்றது. அத்துடன் 2021ம் ஆண்டும் இதே போல லெப்டினன்ட் தளபதி டிபி பாண்டே ரம்ஜான் மாதத்தில் நாமாஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய இராணுவத்தின் நல்லிணக்கத்தைக் கூறும் இந்த புகைப்படத்துக்கு ட்விட்டர் பயனர்களின் சில ரியாக்‌ஷன்களைக் காணலாம்.

PRO Defence Jammu ட்விட்டிற்கு சுரேஷ் சாவாங்கே பதில்

கடந்த ஏப்ரல் 21ம் தேதி PRO Defence Jammu-அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இராணுவ வீரர்கள் காஷ்மீரின் தோடா பகுதி மக்களுடன் இஃப்தர் விருந்தில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. அதில், “மதச்சார்பின்மை மரபுகளை மங்காமல் காக்கும் பொருட்டு தோடா மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் சார்பில் இஃப்தர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது” எனத் தலைப்பிடப்பட்டது.

இந்த ட்விட் வெளியான சில மணி நேரங்களில், “இந்த நோய் இந்திய இராணுவத்திடமும் பரவிவிட்டதா?” என RSS உறுப்பினரும் சுதர்ஷன் நியூஸ் டிவி ஆசிரியருமான சுரேஷ் சாவாங்கே ட்விட் செய்தார்.

இந்த ட்விட் குறித்து இந்திய இராணுவத்தின் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில் PRO Defence Jammu-வின் ட்விட் டெலிட் செய்யப்பட்டது. இது குறித்து பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் லெப்டினன்ட் தளபதி டிபி பாண்டே நமாஸ் செய்யும் புகைப்படம் வெளியானதால் ட்விட்டர்வாசிகள் இந்த புகைப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?