நாய்களின் உலகத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? உங்கள் செல்லப்பிராணி ஒரு நாயாக இருந்தால் ஓரளவு உங்களுக்கு அவற்றைத் தெரிந்திருக்கும்.
எலும்பு துண்டுகள், வாக்கிங், தூக்கம், உரிமையாளரின் அன்பைக் கடந்து ஒரு நாயின் வாழ்வில் என்ன இருக்கப் போகிறது? என்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம்.
ஆனால் அர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள், கிரானைட்கள், போதைப் பொருட்கள் என நம் கற்பனைக்கு எட்டாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறது சன்ஜீர் (Zanjeer) என்ற நாய்.
2000ம் ஆண்டில் இது இறக்கும் தருவாயில் மாநில அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எனில் அதன் வாழ்வை தெரிந்துகொள்ள வேண்டாமா?
1993ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த இறப்பு எண்ணிக்கையானது ஆயிரக்கணக்கில் அதிகரிக்காமல் இருந்ததற்குக் காரணம் ஒரு லேப்ரடர் நாய் என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.
அவன் பெயர் சன்ஜீர். மஞ்சளில் லேசான பழுப்புக் கலந்த முடி, கம்பீரமான உடல் அவனது அடையாளங்கள். அப்போது வெளியகியிருந்த பாலிவுட் ஆக்ஷன் படத்தின் பெயரை தான் இவனுக்கு சன்ஜீர் என வைத்தனர். அந்த முடியின் நிறம் காரணாமாக ஊரில் சிலர் அவனை ஜின்ஜர் என்று விளையாட்டாக அழைப்பதுண்டு.
மும்பை மாநகர காவல்துறைக்கு பாம் ஸ்குவாடில் உதவி வந்த அந்த நாய், 3329 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், 600 டெட்டனேட்டர்கள், 249 கைக்குண்டுகள், 6000க்கும் மேற்பட்ட நேரடி வெடிமருந்துகளைக் கண்டு பிடித்து ஆயிரக்கணக்கான மக்களிம் வாழ்வைக் காப்பாற்றியது.
வெறும் மூன்றே மூன்று டாபர் மேன் நாய்களை மட்டும் வைத்து நாய்ப் படையை நடத்தி வந்தது மும்பை காவல்துறை. குற்ற செயல்கள் அதிகரிப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல்களை முன்னிட்டு மேலும் சில நாய்கள் சேர்க்கப்பட்டன.
1993ல் மொத்தம் ஆறு நாய்கள் படையில் இருந்தன. அவற்றில் ஒரு பப்பியாக இருந்தவன் தான் சன்ஜீர். சாதாரண மோப்பநாயாக இல்லாமல் சிறுவயதிலேயே வெடிகுண்டு கண்டுபிடிப்பில் நிபுணத்துவம் பெற்றிருந்தான் சன்ஜீர்.
கணேஷ் ஆண்டலே மற்றும் வி ஜி ராஜ்புத் என்ற இருவரும் சன்ஜீரை கையாண்டனர். சன்ஜீர் தனது உயிரை மீண்டும் மீண்டும் பணயம் வைத்து மக்களைக் காத்ததற்கு இவர் மீது கொண்டிருந்த அன்பு தான் அடிப்படைக் காரணமாக இருந்தது.
தனது வாழ்நாளில் சட்ட விரோதமாக கடத்தப்படவிருந்த 175 பெட்ரோல் குண்டுகள், 57 நாட்டு வெடிகுண்டுகள், 11 இராணுவ குண்டுகள், 600 டெட்டனேட்டர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட கையெறி குண்டுகளை கண்டுபிடித்திருக்கிறது சன்ஜீர்.
சன்ஜீரின் தீரம் நாடுமுழுவதும் பேசப்பட்டது. காவல்துறையில் மோப்ப நாய்களின் பங்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு அடித்தளமிட்டது.
அதிலும் குறிப்பாக லேப்ரடர் ரீடிரிவர் வகை நாய்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
இப்போது நாடுமுழுவதும் உள்ள காவல்துறைகளில் லேப்ரடர், டாபர் மேன் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
டெல்லி காவல்துறை ஒரு படி முன்னே சென்று நாட்டு நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
மலினாய்ஸ் மற்றும் இராஜபாளையம் நாய்களையும் இப்போது பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
2000ம் ஆண்டு தனது தனது 8 வயதில் சன்ஜீர் எலும்பில் கேன்சர் வந்ததால் மரணித்தது. சன்ஜீரை வளர்த்த காவலர்களுக்கு அது எளிதில் கடக்க முடியாத துயராக இருந்தது.
அதன் பணிகளுக்காக மாநில அளவிலான காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது சன்ஜீர்.
சன்ஜீரைப் போல ஆயிரக்கணக்கான நாய்கள் நாட்டைக்காக்க உயிரைப் பணயம் வைத்து உழைக்கின்றன. ஆனால் மனிதர்களைப் போல அவற்றின் தியாகம் வெளியில் தெரிவதில்லை.
பேசப்படாமல் போகும் அந்த மாவீரர்களும் நம்மை காக்கின்றனர் என்பதை நினைவில் கொள்வோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust