Non veg Twitter
இந்தியா

இந்தியர்கள் சைவ பிரியர்களா, இறைச்சி ரசிகர்களா - உண்மை என்ன?

Govind

மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தின் சாலையோரக் கடைகளில் இனி இறைச்சி உணவுகள் விற்க முடியாது. அதே போன்று வதோதரா, ராஜ்கோட் போன்ற நகரங்களிலும் இறைச்சி கடைகளை மூடுமாறு உத்திரவு போடப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் குருகிராமில் இறைச்சி கடைகளை குறிப்பிட்ட நாட்களில் திறக்க முடியாது. டெல்லியில் ஒரு நகராட்சி பிரிவில் இறைச்சி உணவுகளை காட்சிப்படுத்த முடியாது. இவையெல்லாம் இறைச்சி உணவு உண்ணும் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைகள்.

veg

இந்தியா சைவ உணவு உண்ணும் நாடா?

ஒரு வெளிநாட்டுக்காரர் இந்த நகரங்களுக்கு வந்தால் இந்தியா ஒரு மரக்கறி உண்ணும் தேசம் என்று நினைப்பார். ஆனால் இது ஒரு மிகப்பெரும் கட்டுக்கதை.

70% த்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை உண்பதாக பல சர்வேக்கள் சுட்டிக்காட்டினாலும் உணவு மீதான இந்த பாகுபாடும் கட்டுக்கதையும் தொடர்கிறது.

சில நகரங்களில் சைவ உணவு உண்போர் சதவீதத்தைப் பார்ப்போம்:

இந்தூர்: 49%, மீரட்: 36%, டெல்லி: 30%, நாக்பூர்: 22%, ஹைதராபாத்: 11%, சென்னை: 6%, கொல்கத்தா: 4%. இந்த நகரங்களைப் பார்த்தாலும் இந்தூரைத் தவிர மற்ற நகரங்களில் மரக்கறி உண்போர் சிறுபான்மைதான். அதிலும் சென்னையில் மிகக் குறைவு.

இறைச்சி உண்ணும் குடும்பங்களை விட சைவ உணவு உண்ணும் குடும்பங்கள் அதிக வருமானம் கொண்டவை என்று ஒரு அரசு தரவு காட்டுகிறது. நேரெதிராக ஒடுக்கப்பட்ட சாதியினர், தலித்துக்கள், பழங்குடியினர் இவர்களின் முக்கியமான உணவு இறைச்சிதான்.

தமிழகத்தின் சத்துணவுத் திட்டத்தில் தினசரி முட்டை உண்டு. ஆனால் 12 மாநிலங்களில் அவை அதிகமும் பாஜக ஆள்பவையில் முட்டைக்கு அனுமதி இல்லை. அதே நேரம் அந்த மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து குறியீட்டு எண் குறைவாகவும் இருக்கிறது. பாஜக வந்த பிறகு மத்தியப் பிரதேசமும், அதைத் தொடர்ந்து கர்நாடகாவும் மாணவர்களுக்கான உணவில் முட்டையை நீக்கின.

meat

இந்தியா இறைச்சி உண்ணும் தேசம்தான்

தேசிய குடும்ப நல ஆய்வின் படி நாட்டின் 70% பெண்களும், 78% ஆண்களும் இறைச்சி உண்பவர்கள். தெலுங்கானா, ஆந்திரா, மேற்குவங்கம், தமிழ்நாடு, ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இறைச்சி உண்பவர்கள் 97%. மாறாக பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இறைச்சி உண்பவர்கள் 40%த்திற்கும் குறைவு என அரசாங்க தரவுகள் கூறுகின்றன.

2020இல் இந்தியர்கள் 6 மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டிருக்கிறார்கள். பாதி இந்தியர்கள் வாரம் ஒரு முறையாவது இறைச்சி உணவை உட்கொள்கிறார்கள்.

மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்டு ஒன்பது மாநிலங்களில் இறைச்சி உணபதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. மற்ற மாநிலங்களில் இறைச்சி வகையைப் பொறுத்து சில வகை கட்டுப்பாடுகள் உள்ளன.

பொதுவில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்தியாவில் சைவம் அல்லது மரக்கறி சாப்பிடுவர்களை அதிகமாகக் காட்டுவதுண்டு.

இதைக் காரணமாகச் சுட்டிக் காட்டும் அமெரிக்காவின் மானுடவியலார் பாலமுரளி நடராஜன் மற்றும் இந்தியாவின் பொருளாதார நிபுணர் சூரஜ் ஜேக்கப் இவர்களின் ஆராய்ச்சிப்படி 20% இந்தியர்கள்தான் மரக்கறி சாப்பிடுகிறார்கள். அதிலும் இந்திய மக்கள் தொகையில் 80% இருக்கும் இந்துக்களில் பெரும்பாலனோர் இறைச்சி உண்பவர்கள். குறைவான எண்ணிக்கையில் இருக்கும் உயர்சாதியினரில் கூட மூன்றில் ஒரு பங்கினர்தான் சைவ உணவு உண்கிறார்கள்.

meat

மாட்டிறைச்சி அரசியல்

குறைந்தபட்சம் 7% இந்தியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்று அரசாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வலதுசாரி அரசியலின் கருத்துப்படி பசுவைப் புனிதமாகக் கருதி பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறது. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஏற்கனவே பசுமாட்டை வெட்ட தடை விதித்துள்ளன. மேலும் மாட்டு வியாபாரிகள், கால்நடைகள் ஏற்றிச் சென்றவர்களெல்லாம் குண்டர் படைகளால் கொல்லப் பட்டிருக்கின்றனர்.

ஆய்வாளர்கள் நடராஜன் மற்றும் ஜேக்கப் ஆய்வின் படி 15% இந்தியர்கள் அதாவது 18 கோடிப் பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள். தலித்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட இந்துக்களும் கூட மாட்டிறைச்சி உண்கின்றனர். கேரளாவில் ஆட்டிறைச்சியை விட மாட்டிறைச்சிதான் பிரபலம். அதே போன்று வட கிழக்கு மாநிலங்களிலும் மாடுதான் பிரதான உணவு.

meat

இந்தியாவை சைவ உணவின் தாயகமென்று கூறும் கட்டுக்கதைகள்

தில்லியில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைவ உணவு உண்பவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தில்லிதான் கோழிக்கறியின் தலைநகரம் என்று சொல்லுமளவுக்கு அங்கே நுகர்வு அதிகம்.

தென்னிந்தியா அதுவும் சென்னை என்றால் ஏதோ இட்லி சாம்பார் தேசமாக வட இந்தியாவில் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் சென்னையில் 6% மக்கள்தான் சைவ உணவு சாப்பிடுகிறார்கள்.

அடுத்து புராணங்களின் படி இறைச்சி சாப்பிடுபவர்கள அசுரர்கள், வலிமை மிக்கவர்கள், முரடர்கள் என்று கருத்து நிலவுகிறது. ஆனால் சைவ உணவு உண்பவர்கள் அதிகம் இருக்கும் மாநிலங்களில்தான் குடும்ப வன்முறைகள், ஆணவக் கொலைகள், இதர தொழில்முறைக் கொலைகள் அதிகம் நடக்கின்றன.

meat

இந்தியா - இறைச்சியின் தாயகம்

உலக இறைச்சி உற்பத்தியில் இந்தியா 2.18% கொண்டுள்ளது. சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக அதிக இறைச்சியை உற்பத்தி செய்யும் ஆறாம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் இறைச்சி உற்பத்தி 2015 முதல் 2020 வரையிலும் 5.15% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மொத்த இறைச்சி உற்பத்தியில் 30% எருமை இறைச்சி பங்களிப்பு செய்கிறது. அதில் மோடி வெற்றி பெற்ற உத்திரப்பிரதேசத்தின் பங்கு 15%, மகாராஷ்டிரா 13%, மேற்கு வங்கம் 10% பங்கைக் கொண்டுள்ளது.

கோவிட் பொது முடக்கத்தின் போது பொருளாதாரம் சீர்குலைந்தாலும் இறைச்சி தொழில் பாதிப்படையவில்லை. 2020-21 ஆம் ஆண்டில் இறைச்சி ஏற்றுமதி மூலம் இந்தியா 3.17 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது. இந்திய இறைச்சி 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

குரங்கு மூதாதையரிடமிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியில் உருவானதற்கு இறைச்சியின் பங்கு முக்கியமானது. மனித மூளை அதிக எடை கொண்டதாகவும் அதிக ஆற்றல் கொண்டதாக மாறியதற்கும் அதுவே காரணம். இன்று உலகம் முழுவதும் இறைச்சி உண்பவர்களே அதிகம். சிறு குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கும் இறைச்சி உணவே அடிப்படையானது.

இந்தியாவில் மட்டும் அரசியலால் இறைச்சி ஏதோ தீண்டத்தகாததாக காட்டப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. சென்னையில் இனி பிரியாணி கிடையாது என தடை செய்தால் மக்கள் வேறு எந்தப் போராட்டத்திற்கும் வரவில்லை என்றால் கூட இதற்கு வருவார்கள். பிரியாணி தடை நீக்கப்படும் வரை ஓயமாட்டார்கள். இதுதான் பெரும்பாலான இந்தியாவின் நிலை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?