கோவா என்றவுடன் அழகிய கடற்கரைகள், சுவையான கடல் உணவுகள், பார்ட்டி இரவுகள் என நம் நினைவிற்கு வரும்.
இது எல்லாம் கோவாவில் பிரபலமாக இருந்தாலும், கோவா கலாச்சாரம், பாரம்பரியத்தின் புதையலாக இருப்பது குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
வரலாறு மற்றும் ஆன்மீகத்தின் கதைகளை விவரிக்கும் கோயில்களுக்கு கோவா தாயகமாக உள்ளது. கோவா பார்ட்டிக்கானது என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை வழங்குவோம், அதாவது கோவாவின் மறுபக்கம் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். கோவாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து கோவில்கள் இதோ
சான்கோலில் உள்ள பிர்லா கோயில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார அடையாளமாகும். இது பாரம்பரிய இந்திய கட்டிடக்கலையை புதுமையான வடிவமைப்புடன் இணைக்கிறது. ராதா மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் பல தெய்வங்கள் உள்ளன.
75-அடி உயரமுள்ள பிரதான கோபுரம் இங்கு உள்ளது. வெள்ளைமார்பிள் மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட இது 650க்கும் மேற்பட்ட மக்கள் தங்கும் விசாலமான பிரார்த்தனை மண்டபத்துடன் அமைதியான உட்புறத்தை வழங்குகிறது.
கோவாவின் போண்டா பகுதியில் உள்ள மங்கேஷி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கேஷி கோயில் அதிகம் பார்வையிடப்படும் கோயில்களில் ஒன்றாகும்.
இது சிவபெருமானின் அவதாரமான மங்கேஷ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 450 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த கோவில் அற்புதமான கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது.
கோவில் வளாகத்தில் ஒரு முக்கிய நந்தி காளை மற்றும் அழகான ஏழு அடுக்கு தீபஸ்தம்பம் (விளக்கு கோபுரம்) உள்ளது.
ஸ்ரீ சாந்த துர்கா கோயில் சாந்ததுர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது போண்டா தாலுகாவில் உள்ள கவலேம் கிராமத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் இதுவும் ஒன்று.
இந்த கோயில் சரஸ்வத் கட்டிடக்கலை பாணியை காட்சிப்படுத்துகிறது. இது ஆரம்பத்தில் போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்டது, பின்னர் மராட்டியப் பேரரசின் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டது.
மஹாலசா நாராயணி கோயில், விஷ்ணுவின் பெண் அவதாரமான மஹாலசா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது போண்டாவின் மார்டோலில் அமைந்துள்ளது. இதன் வரலாறு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
விஷ்ணு ஆண் மற்றும் பெண் வடிவங்களில் வழிபடப்படும் அரிய கோவிலாக இது கருதப்படுகிறது. மணி அடிக்கும் போது பொய் சொன்னால் மூன்று நாட்களுக்குள் மரண தண்டனையை சந்திக்க நேரிடும் என்று புராணம் கூறுகிறது.
கோவாவின் பந்தோராவில் அமைந்துள்ளது இந்த மகாலட்சுமி கோவில். தலையில் லிங்கத்துடன் கூடிய தேவியின் சிலை கோயிலின் சிறப்பம்சமாகும்.
கோவாவிற்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது, மாநிலத்தின் இந்த அமைதியான மற்றும் புனிதமான பக்கத்தை ஆராய மறந்துவிடாதீர்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust