These 5 Foods Are Available In India, But Banned In Other Countries Twitter
இந்தியா

சமோசா முதல் நெய் வரை: இந்தியாவின் பிரபலமான 5 உணவுகளுக்கு மற்ற நாடுகளில் தடை - ஏன்?

Priyadharshini R

நாம் அன்றாட உணவில் பலவகையான உணவுகளை உட்கொள்கிறோம்.

இருப்பினும், இந்தியாவில் விரும்பி உட்கொள்ளப்படும் சில உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

samosa

சமோசா

சமோசா இந்தியாவில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி. எல்லா வயதினருகம் விரும்பி சுவைக்கக் கூடிய ஸ்நாக்ஸ் வகையாகும்.

தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் அமைந்துள்ள சோமாலியாவில், 2011 முதல் சமோசா சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவில் இந்த சட்டத்தை மீறுவது கடுமையான தண்டனை வழங்கப்படுவதாக தகவல் கூறுகின்றன.

அந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய கடும்போக்கு ஆட்சியாளர்கள் சமோசா மேற்கத்திய உணவாக இருப்பதனால் அதனை தடைசெய்வதாக கூறினர்.

கெட்ச்அப்

இந்தியாவில், நீங்கள் சமோசா முதல் சாண்ட்விச்கள் வரை கிட்டத்தட்ட எல்லாவற்றுடனும் கெட்ச்அப்பை சேர்த்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் பிரான்சில், கெட்ச்அப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இளம் வயதினரிடையே கெட்ச்அப்பை அதிகமாக உட்கொள்வதை பிரெஞ்சு அரசாங்கம் கவனித்தது. சுகாதார காரணங்களுக்காக பள்ளி சிற்றுண்டிச்சாலைகளில் அதன் பயன்பாட்டை தடை செய்தது பிரெஞ்சு அரசு. மேலும் அவர்கள் பிரெஞ்சு உணவு கலாச்சாரத்தை அமெரிக்கமயமாக்கப்படாமல் பாதுகாக்க இவ்வாறு செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நெய்

இந்திய உணவு வகைகளில் நெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது.

இது பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் மத சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் நெய் தடை செய்யப்பட்ட பொருளாகும்.

நெய் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களை ஏற்படுத்தும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டறிந்துள்ளதாக கூறி நெயை அங்கு தடைசெய்துள்ளனர்.

ச்யவன்பிரஷ்

காலையில் ஒரு ஸ்பூன் ச்யவன்பிரஷை சாப்பிடாமல் இந்தியாவில் பலருக்கு குளிர்காலம் முழுமையடையாது.

இது ஒரு பாரம்பரிய இந்திய லேகியமாக கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக மக்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

பழங்கள், மூலிகைகள் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக நம்பப்படுகிறது.

கனடாவில், 2005 ஆம் ஆண்டு முதல் இதன் விற்பனை மற்றும் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது. தயாரிப்பில் அதிக அளவு ஈயம் மற்றும் பாதரசம் இருப்பதாகக் கூறி தடை விதிக்கப்பட்டது.

சூயிங்கம்

இந்தியாவில், சாலையோர பெட்டிகடைகளில் அல்லது மளிகைக் கடைகளில் சூயிங்கம் எளிதாகக் காணப்படுகிறது. அதை வாய் ப்ரெஷ்னராகப் பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூர் தூய்மையைப் பராமரிக்க கடுமையான வழிகாட்டுதல்களைக் கொண்டு வந்தது. அவற்றில் ஒன்று சூயிங்கம் விற்பனைக்கு தடை

1992 ஆம் ஆண்டில், நாடு அனைத்து வகையான சூயிங்கம்களின் பயன்பாடு, விநியோகம் மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது.

இருப்பினும், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, 2004 ஆம் ஆண்டில், சூயிங்கம்மை சிங்கபூர் அனுமதித்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?