மகாபுலிபுரம் To தாஜ்மஹால் - அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலா தலங்கள் - இத்தனை கோடியா?
மகாபுலிபுரம் To தாஜ்மஹால் - அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலா தலங்கள் - இத்தனை கோடியா? Twitter
இந்தியா

மகாபுலிபுரம் To தாஜ்மஹால்: அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலா தலங்கள் - இத்தனை கோடியா?

Priyadharshini R

நம் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை நாடு. இங்கு பல பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் உள்ளதால் நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலாதுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

சுற்றுலாதுறையில் இருந்து நல்ல வருமானம் வருகிறது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் சுற்றுலாதுறை தலை தூக்கியுள்ளது .

அதிக வருமானம் ஈட்டும் இந்திய சுற்றுலா தலங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

தாஜ்மஹால்

தாஜ்மஹால், ஆக்ரா

தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது மனைவியான மும்தாஜ் நினைவாக கட்டியதாகும். நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.

ஆண்டு வருமானம்

2013-2014 வருவாய்: ரூ. 21,84,88,950 உள்ளது

2019-2020 ஆம் ஆண்டில், தாஜ்மஹாலில் இருந்து கிடைத்த வருவாய் ரூ. 97.5 கோடி. அதேபோல், 2021-22ல் ரூ. 26.61 கோடி வருவாய் கிடைத்தது.

குதுப் மினார்

குதுப் மினார் ,டெல்லி

குதுப் மினார் 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான கோபுரமாகும். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக உள்ளது.

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ 10,16,05,890

2019-20-ம் ஆண்டு குதுப்மினாரில் நுழைவு சீட்டு விற்பனை மூலம் ரூ.20.17 கோடி வருமானம் கிடைத்தது.

2021-2022 ஆண்டில் குதுப்மினார் ரூ.5.07 கோடி வருமானம் ஈட்டியது.

ஆக்ரா கோட்டை

யுனெஸ்கோவின் மற்றொரு உலக பாரம்பரிய தலமான ஆக்ரா கோட்டை, மூன்றாவது முகலாய பேரரசர் அக்பரால் கட்டப்பட்டது

இதன் வருமானம்

2013-2014 வருமானம் - ரூ10,22,56,790

ஹுமாயூன் கல்லறை, டெல்லி

முகலாய பேரரசர் ஹுமாயூனின் கல்லறை 1572 இல் அவரது மனைவியான பேகா பேகத்தால் கட்டப்பட்டதாகும்

இதன் வருமானம்

2013-2014 - ரூ 7,12,88,110

செங்கோட்டை

செங்கோட்டை டெல்லி

ஷாஜகானின் ஆட்சியின் போது செங்கோட்டை ஷாஜஹானாபாத்தின் அரண்மனையாக இருந்தது. இதன் கட்டமைப்பின் எட்டு பக்கங்களிலும் உள்ள சிவப்பு மணற்கல்லில் இருப்பதால் இதற்கு செங்கோட்டை என பெயர் வந்தது.

இதன் வருமானம்

2013-2014 - ரூ.6,15,89,750

Mahabalipuram

மகாபுலிபுரம்

சென்னைக்கு தெற்கே 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மகாபுலிபுரம். பல்லவ மன்னர்கள் உருவாகிய கற் கோயில்கள், மண்டபங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.

இதன் வருமானம்

2013-2014 -ரூ 2,72,93,480

எல்லோரா குகைகள்

எல்லோரா குகை ஓவியங்கள் உலக புகழ் பெற்றவை. அவுரங்காபாத்தில் இருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியில் கைலாஷ் கோயில், உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல்கட்டமைப்பு இங்கு சிறப்பு வாய்ந்தது.

இதன் வருமானம்

2013-2014 -ரூ 2,06,72,820

கஜுராஹோ

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ, இடைக்கால இந்து மற்றும் ஜெயின் கோயில்களின் பெரிய கோயிலாகும். இங்கு உள்ள சிற்ப அமைப்பை பார்க்க சுற்றுலாவாசிகள் வருகின்றனர்.

இதன் வருமானம்

2013-2014 -ரூ. 2,24,47,030

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?

அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!

Health: இதய பிரச்னைகளுக்கான முக்கிய அறிகுறிகள் என்னென்ன?

இந்தியாவில் இருக்கும் மிளகாய் வகைகள் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

இந்தியாவில் இருக்கும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள் பற்றி தெரியுமா?