குஜராத் முதல் கோவா வரை: இந்த இந்திய நகரங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது? ட்விட்டர்
இந்தியா

குஜராத் முதல் கோவா வரை: இந்த இந்திய நகரங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்படுகிறது?

கடந்த ஆண்டு இந்த சரயு நதிக்கரையில் சுமார் 17 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இங்கு தீபாவளி கொண்டாட்டத்தில் இணைவார்

Keerthanaa R

இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த தீப ஒளி திருநாளில் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து, உற்றார் உறவினருடனுடன் நாம் கொண்டாடுகிறோம்.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அங்குள்ள இந்தியர்களுடன் அந்த நாட்டவர்களும் கொண்டாட்டத்தில் இணைகையில் கலாச்சார ஒருங்கிணைப்பாடே ஏற்படுகிறது எனலாம்.

இந்நிலையில், இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் இந்த தீபாவளி பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் காணலாம்

அயோத்தியா

ராமரின் பிறப்பிடமான இங்கு தீபாவளி விமர்சியாக கொண்டாடப்படுகிறது. கதைகளின்படி, ராமர், சீதை மற்றும் லகுவனன், 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து திரும்பிய நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

ஆகையால், அயோத்தி மக்கள், இங்குள்ள சரயு நதி முன்பு ஒன்று கூடி, விளக்குகள் ஏற்றி கொண்டாடுகின்றனர். இங்கு மொத்தம் 4 நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த சரயு நதிக்கரையில் சுமார் 17 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இங்கு தீபாவளி கொண்டாட்டத்தில் இணைவார்

அமிர்தசரஸ்

அமிர்தசரஸில் தீபாவளி, சீக்கிய மத குருவினை போற்றுவதாக இருக்கிறது. 1619ஆம் ஆண்டு ஆறாவது சீக்கிய குருவான ஹர்கோவிந்த் சிங், சிறையில் இருந்து வெளியான நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

இங்குள்ள தங்கக்கோவிலில் மக்கள் அனைவரும் கூடி, அங்குள்ள குளக்கரையில் விளக்குகள் ஏற்றி பிரார்த்தனைகள் செய்கின்றனர். பட்டாசுகளுடன் கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தீபாவளியை தொடர்ந்து இங்கு கோவர்தன பூஜை நடைபெறுகிறது

வாரணாசி

இங்குள்ள கங்கா காட்களில் விளக்குகள் ஏற்றி, தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த காட்சி கண்களை பறிக்கிறது.

இரண்டு வாரங்கள் கழித்து வாரணாசியில், தேவ் தீபாவளி என்ற ஒரு நிகழ்வும் கொண்டாடப்படுகிறது

கோவா

இங்கு தீபாவளி திருநாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர், நரகாசுரனை கொன்ற தினத்தை தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் நம்பப்படுகிறது. ஆகையால், இங்கு நரகாசுரனின் பொம்மை எரிக்கப்ப்பட்டு பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடுகின்றனர்.

இந்த நிகழ்வானது, தீபாவளிக்கு முந்தைய நாளான நரகாசுர சதுர்தசி அன்று நடைபெறுகிறது

குஜராத்

இங்கு ஐந்து நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தந்தேராஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த தந்தேராஸ் தினத்தன்று மக்கள் தங்கம் வாங்குகின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் செழித்தோங்கும் என்று நம்புகின்றனர்.

அடுத்ததாக நரக சதுர்தசி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணர் வேடம் தரித்து மக்கள் நரகாசுரனை கொல்கின்றனர்.

மூன்றாவது நாள் தீபாவளி, நான்காம் நாளில் பலி பாட்யா மற்றும் ஐந்தாவது நாளில் விக்ரம்சம்வத் என்று கொண்டாடப்படுகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?