நாம் வேலை தேடும் நேரத்தில் பல நிறுவனங்களுக்கும் மெயில்களை அனுப்பி குவித்திருப்போம். அதில் ஒரு நிறுவனத்தை தவிர மற்ற எல்லா நிறுவனங்களும் நம்மை ரிஜக்ட் செய்திருப்பார்கள்.
பொதுவாக இந்த ரிஜக்ஷன் மெயில்கள் மன வேதனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் நல்ல ரிஜக்ஷன் மெயில்களை எழுதியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார் 24 வயது பெண் ஒருவர்.
டெல்லியைச் சேர்ந்த இந்த பெண் மெயில் அனுப்பும் தொனியும் மொழியும் வாசிப்பவர்களின் தன்னம்பிக்கையை சிதைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்.
நீங்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை கூறுவதுடன், அவர்களின் திறமையையும் முயற்ச்சியையும் பாராட்டியுள்ளார். இதனால் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்களும் சரி சமூலவலைத்தளவாசிகளும் சரி இவரைப் புகழ்ந்து வருகின்றனர்.
ஸ்டம்பல் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை எடிட்டரான ரியா சோப்ரா ரிஜக்ஷன் லெட்டர்கள் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"இப்போதுதான் முதன் முதலாக ரிஜக்ஷன் மெயில்களை எழுதுகிறேன். இதற்கு நல்ல பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. " என X வலைத்தளத்தில் கூறியிருந்தார்.
இவரது ட்வீட்டுக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கம்ண்ட்கள் வந்திருக்கின்றன.
மேலும் அவர், "இது ஒரு சிறிய விஷயம், நான் நிராகரிப்பு மெயில்களை எழுத வேண்டியது இருந்தது. ஆனால் ஊக்கமளிக்கும் மெயில்களை எழுதினேன். இவை மரியாதையாகவும் நல்ல வைப்பை உருவாக்கும் எண்ணத்திலும் எழுதப்பட்டவை. இப்படியான ரிஜக்ஷன் மெயில்களையே நான் பெறவும் விரும்பினேன்.
ரியா சோப்ரா 2 இண்டெர்ஷிப்களுக்காக தேவையை போஸ்ட் செய்த போது கிட்டத்த 100 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் அவர் 90க்கும் மேற்பட்ட ரிஜக்ஷன் மெயில்களை எழுதவேண்டியிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரியாவும் பல ரிஜக்ஷன்களை சந்தித்தவர் என்பதனால் இவற்றை நல்ல முறையில் எழுதியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust