This Bengaluru breeder bought a dog for Rs 20 crores! Twitter
இந்தியா

ரூ.20 கோடி கொடுத்து "காகேசியன் ஷெப்பர்டு'' இன நாயை வாங்கிய நபர் - எங்கே?

Priyadharshini R

இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரும், பெங்களூருவில் உள்ள 'கடபோம்ஸ் கென்னல்ஸ்' என்ற நாய் விற்பனை கடையின் உரிமையாளருமான சதீஷ் ரூ.20 கோடி கொடுத்து 'காகேசியன் ஷெப்பர்டு' இன நாயை வாங்கி உள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து சதீஷ் இந்த நாயை வாங்கி உள்ளார்.

அந்த நாய்க்கு தற்போது 1 வருடம் 6 மாதம் வயது தான் ஆகிறது. நாய்க்கு 'கடபோம் ஹைடர்' என்றும் சதீஷ் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நாய் பெரும்பாலும் ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஒசேஷியா, சர்க்காசியா, துருக்கி, ரஷ்யா மற்றும் தாகெஸ்தான் ஆகிய நாடுகளில் தான் இருக்கும். இந்தியாவில் இந்த இன நாய்களை பார்ப்பது மிகவும் அரிதானது.

காகேசியன் ஷெப்பர்டு இன நாய்கள் பொதுவாக பயமில்லாமலும் சிறந்த அறிவுத்திறன் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த நாய்கள் 10 முதல் 12 வருடங்கள் உயிர்வாழ கூடியவை மற்றும் எடை 45 முதல் 77 கிலோ கிராம் வரை வளரக்கூடியவையாகும்.

சதீஷ் ஏற்கனவே 'திபெத்தியன் மஸ்டிப்' இன நாயை ரூ.10 கோடி, 'அலஸ்கன் மலமுடே' இன நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த 'தோசா மஸ்டிப்ஸ்' இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?