இந்த சேலையின் விலை 9 லட்சமாம்! அப்படி என்ன ஸ்பெஷல்? ட்விட்டர்
இந்தியா

இந்த சேலையின் விலை 9 லட்சமாம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்த புடவைக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஒருவர் இந்த புடவையை முன்பதிவு செய்துவிட்ட நிலையில், அடுத்த புடவையை 9 லட்சத்திற்கும், மற்றொரு புடவையை 21 லட்சம் ரூபாய்க்கும் விற்க கடைக்காரர்கள் விலை மதிப்பிட்டுள்ளனர்.

Keerthanaa R

இந்தியாவின் லக்னோ நகரில் தயாரிக்கப்படும் இந்த புடவையின் விலை 9 லட்சம் ரூபாயாகும். இந்த விலையில் ஒரு மினி சொகுசு காரை, தங்க நகைகள் கூட வாங்கி விடலாம்.

பொதுவாக துணிக்கடைகளில், அல்லது புடவைக் கடைகளில் ஒரு புடவையின் விலை குறைந்தபட்சமாக ரூ. 200ல் இருந்து தொடங்கும்.

இதன் விலை பல நூறுகளை, ஆயிரங்களை கூட எட்டும். வேலைபாடுகள், சேலை நெய்யப்படும் துணியின் தன்மை, என்பதன் அடிப்படைகளில் புடவைகளின் விலைகள் ஏற்றம் காணும்.

ஆயிரம், ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து பட்டுப்புடவை, சின்தட்டிக் புடவைகள் வாங்குவோம். ஒரு சிலர் லட்சங்கள் கொடுத்தும் புடவைகள் வாங்குவார்கள்.

அப்படி பல லட்ச ரூபாய் மதிப்புடைய புடவையை பற்றிய பதிவு தான் இது.

லக்னோ நவாப்களின் சொர்க்க பூமி என்று அறியப்படுகிறது. இங்கு தான் இந்த பல லட்சம் மதிப்புடைய புடவை கிடைக்கிறது. லக்னோவின் ஹஸ்ரத்காஞ்ச் பகுதியில் அமைந்திருக்கிறது அடா ஃபேஷன் ஸ்டோர். இங்கு பொதுவாகவே லட்சங்களில் தான் புடவைகள் கிடைக்கிறது. அதில் ஒரு புடவையின் விலை 9 லட்சம் ரூபாய்.

அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புடவையில் என்று கேட்கிறீர்களா?

இந்த புடவை ஷிஃபான் மற்றும் சிக்கன்காரி பட்டு துணிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சேலை முழுவதும் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகவும் நுணுக்கமாக நெருக்கமாக கிறிஸ்டல் கற்கள் பதியப்பட்டுள்ள இந்த புடவையை ஓராண்டுக்கும் மேலாக உழைத்து தயார் செய்துள்ளனர். எம்பிராய்டரி வேலைபாடுகள் உள்ள இந்த புடவை லைட் வெயிட்டாக உள்ளது.

இந்த புடவைக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஒருவர் இந்த புடவையை முன்பதிவு செய்துவிட்ட நிலையில், அடுத்த புடவையை 9 லட்சத்திற்கும், மற்றொரு புடவையை 21 லட்சம் ரூபாய்க்கும் விற்க கடைக்காரர்கள் விலை மதிப்பிட்டுள்ளனர்.

இந்த புடவைகள் அக்டோபர் மாதம் கிடைக்கும். இதை தவிர நவாப் காலத்து பாரம்பரிய ஆடைகளுக்கும், நகைகளுக்குமே மவுசு அதிகமாக இருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?