கர்நாடகா இயற்கை வனப்புமிக்க ஒரு மாநிலம் என்பதை நாம் அறிவோம். மேற்கு தொடர்சி மலை இந்த மாநிலத்தின் வழியாக செல்வதனால் பச்சை பசேலென்ற பகுதிகளைக் காணலாம்.
ஆனால் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தலக்காட்டில் ஒரு சிறிய பாலைவனமே இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
தலக்காடு கர்நாடகாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். கங்கா வம்சத்தின் ஆட்சியில் இந்த நகரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சோழர்கள் மற்றும் ஹொய்சலாக்களால் ஆளப்பட்டது.
நமக்கு தெரிந்த படி கர்நாடகாவின் மலைகளில் உருவாகும் காவிரி ஆற்றின் இடதுகரையில் இந்த ஊர் அமைந்துள்ளது. பல சதுர கிலோமீட்டர்கள் விரிந்திருக்கும் இந்த பகுதி, "மிருதுவான தங்க நிற மணல்பரப்பை கொண்டிருக்கும். இந்த மணல் பரப்பின் காரணமாகவே இதனை மினி-பாலைவனம் என்றழைக்கின்றனர்.
ஆங்காங்கே இருக்கும் மரங்களும், குன்றுகளும், மணல் மேடுகளும் உண்மையாகவே இந்த இடத்தைப் பாலைவனம் போலக் காட்சிப்படுத்துகின்றன.
தலக்காடு பகுதி பாலைவனம் போன்ற நிலப்பரப்பாக இருப்பதற்கான காரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. சிலர் இங்கிருந்த எரிமலை செயல்பாடுகள் தான் இதற்கு காரணம் என்கின்றனர். சில ஆயிரம் ஆண்டுகளாக காவிரியின் வழி மாறியதுதான் காரணம் என்கின்றனர்.
அல்லேமேலம்மா என்ற ராணி 16ம் நூற்றாண்டில், "தலக்காசு மண்ணாய் போகட்டும், மலாங்கு நீர்ச்சுழியாகட்டும், மைசூர் மன்னர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போகட்டும்" என சாபம் கொடுத்ததாகவும், அதுதான் இந்த நிலைக்கு காரணம் என்றும் சிலர் நம்புகின்றனர்.
தலக்காட்டில் வைத்தியநாதேஸ்வரர் கோவில், கீர்த்திநாராயணர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களால் இயற்கையாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியிலும் தலக்காடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் இருந்து ஆன்மிகத்தையும், புவியியலையும் நேசிக்கும் ஒருவர் ஒருநாள் சுற்றுலாவாக சென்றுவர தலக்காடு சிறந்த இடம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust