Threads to Bluesky : The best Twitter alternative Apps Twitter
இந்தியா

ட்விட்டரில் அடுத்தடுத்து மாற்றம்; எலான் மஸ்க்கு சவால் விடும் 3 APPகள் - என்னென்ன?

Priyadharshini R

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய தொழில்நுட்பங்களை கையாளும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் எலான் மஸ்க்.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார்.

அதன் பிறகு, நிறுவனத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்த மஸ்க், லே ஆஃப் , புளு டிக்கிற்கான கட்டணம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சமீபத்திய செய்தி என்னவென்றால், ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்வீட்களை மட்டுமே பார்க்க முடியும். பணம் செலுத்தி ட்விட்டரில் ப்ளூ பேஜ் பெற்றிருக்கும் சந்தாதாரர்களுக்கும் கூட இந்த வரைமுறையுள்ளது.

Elon Musk

ஒரு கட்டத்திற்கு மேல் "ட்விட்டர்" எலைட் மக்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலைகூட உருவாகலாம். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் மக்கள் ட்விட்டருக்கு பதிலாக வேறு செயலியை பயன்படுத்த தொடங்குவார்களா?

அப்படி ட்விட்டருக்கு போட்டியாக இருக்கும் ஆப்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

த்ரெட்ஸ்

த்ரெட்ஸ் என்பது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவின் செயலியாகும். இது ஜூலை 6 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்டா தலைமை தயாரிப்பு அதிகாரி கிறிஸ் காக்ஸின் கூற்றுப்படி, ஜனவரி 2023 முதல் மெட்டா டெவலப்பர்களுடன் த்ரெட்ஸ் செயல்பாட்டில் உள்ளது. இது ட்விட்டரைப் போலவே செயல்படும் என்றார்.

ஏற்கனவே உள்ள Instagram கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி இந்த செயலியில் லாகின் செய்ய முடியும்.

Bluesky

ட்விட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தான் கடந்த 2021-ல் ப்ளூஸ்கை என்ற சமூக ஊடக தளத்தை உருவாக்கினார். ட்விட்டர் பயனர்களிடையே இந்த புதிய தளம் பிரபலமடைந்து வருகிறது.

இது கடந்த பிப்ரவரி மாதம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்காக தொடங்கப்பட்ட சமூக ஊடக சேவையாகும். தற்போது இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதில் பயனர்கள் 300 எழுத்துகள் மற்றும் படங்களைக் கொண்ட குறுகிய செய்திகளை பதிவிடலாம்.

மாஸ்டோடன்

மாஸ்டோடன் 2016 இல் ஜெர்மன் மென்பொருள் டெவலப்பர் யூஜென் ரோச்கோவால் நிறுவப்பட்டது.

மஸ்டோடன் பல வழிகளில் ட்விட்டரை ஒத்திருக்கிறது. ட்விட்டரில் வந்த ஏகப்பட்ட மாற்றங்களை தொடர்ந்து மக்கள் மஸ்டோடன் பக்கம் திரும்பியுள்ளனர்.

ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?