நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க மின்கம்பம் அல்லது கார் டயரை தேர்தெடுக்கின்றன? சுவாரஸ்ய காரணம்! twitter
இந்தியா

நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க மின்கம்பம் அல்லது கார் டயரை தேர்தெடுக்கின்றன? சுவாரஸ்ய காரணம்!

இது தற்செயலாக இந்த இனத்திற்கு வந்த பழக்கம் இல்லை என்பதையும் இதற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

Keerthanaa R

நாம் தினமும் வெளியில் செல்லும்போது நாய்கள் கம்பங்கள் அல்லது வாகன டயர்களில் சிறுநீர் கழிப்பதை கவனித்திருப்போம்.

நாம் வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் வெளியில் கூட்டிச் சென்றால் அவற்றிடம் இந்த பழக்கத்தை நாம் கவனிக்கலாம்.

இது தற்செயலாக இந்த இனத்திற்கு வந்த பழக்கம் இல்லை என்பதையும் இதற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

நாய்கள் ஏன் பெரும்பாலும் வாகன டயர்கள் அல்லது கம்பங்களை தேர்ந்தெடுத்து சிறுநீர் கழிக்கின்றன என்பதை கண்டறிய நாய் நிபுணர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் நிபுணர்களுக்கு மூன்று முக்கிய காரணங்கள் கிடைத்தன.

1.எல்லை குறிக்க

ஒரு கம்பம் அல்லது கார் டயரில் சிறுநீர் கழிக்கும்போது நாய்கள் தங்களின் ஏரியாக்களை மார்க் செய்கின்றன. இது எனது இடம் என்பதை அதனுடைய நண்பர்களுக்கு சொல்கிறது. இந்த வாடையை வைத்து மற்ற நாய்களும் அங்கு தங்களின் முத்திரை பதிப்பதுடன், அவர்களுக்குள் தொடர்புகொள்ளவும் எளிதாக உள்ளது

2.எட்டும் தூரம்

நாய்கள் பெரும்பாலும் சிறுநீர் கழிக்க மட்டமான செங்குத்தான பரப்புகளையே தேர்ந்தெடுக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதிகள் நாய்களின் நாசிக்கு மிக அருகில் உள்ளன. இதனால் அவர்கள் குறித்து வைத்த இடத்தை கண்டறிய நாய்களுக்கு எளிதாக இருக்கிறது.

நாய்கள் தங்கள் நண்பர்களுக்கு தகவலளிக்க இந்த இடங்களை குறிக்கும் அல்லவா? செங்குத்தான இடங்களில் சிறுநீர் கழிக்கும்போது மற்ற நாய்களுக்கும் இடத்தை கண்டறிய எளிதாக உள்ளது.

3.வாசனை பிடிக்கும்

நாய்கள் சிறுநீர் கழிக்க ரப்பர் டயர்களை தேர்ந்தெடுக்க மற்றுமொரு காரணம், அவைகளுக்கு ரப்பரின் வாசனை மிகவும் பிடிக்கும். டயரின் வாசனையால் ஈர்க்கப்பட்டு நாய்கள் அங்கு சிறுநீர் கழிக்கின்றன

மேலும், ரப்பர் டயர்களில் இந்த சிறுநீரின் வாடை அதிக நேரம் நீடித்திருக்கும். தரையில் சிறுநீர் கழித்தால் வாடை நீண்ட நேரம் நிலைக்காது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?