இந்தியா 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தின் வேலூரில் 1805 இல் சிப்பாய்கள் கலகத்தில் துவங்கிய சுதந்திரப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியாக பல பத்தாண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்றது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது, நூற்றுக்கணக்கான இயக்கங்கள், மக்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடினர். நாட்டிற்காக பலர் உயிர் தியாகம் செய்தார்கள். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற சில கவிஞர்களை இங்கே திரும்பிப் பார்ப்போம்.
கவிஞர் என்றால இந்திய அளவில் நமது நினைவுக்கு வருவது ரவீந்திரநாத் தாகூர் தான். நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்- கவிஞர் மட்டுமல்ல, ஒரு மனிதநேயவாதியும் கூட. வங்காள மறுமலர்ச்சிக்குக் காரணமான முன்னணியாளர்களில் அவரும் ஒருவர். பல சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போலல்லாமல், தாகூர் தேசியவாதத்தின் பொதுவான கருத்தை நம்பவில்லை. அவரது மனித நேயம் தேசம் கடந்ததாக இருந்தது.
மற்றவர்களை விட அவர் காலத்தில் முன்னோக்கிப் பார்த்தார். தாகூரின் 'எங்கே மனம் அச்சமில்லாமல் இருக்கிறது' என்ற கவிதையும் 'கீதாஞ்சலி' என்ற கவிதைத் தொகுப்பும் அவரது புகழ்பெற்ற படைப்புகளில் சில. இந்தியாவின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜன கண மன' மற்றும் தற்போது பங்களாதேஷின் தேசிய கீதமாக இருக்கும் 'அமர் ஷோனர் பங்களா' ஆகியவற்றை எழுதியதற்காகவும் அவர் அறியப்படுகிறார்.
கவிஞர்-அரசியல்வாதி-செயல்பாட்டாளரான சரோஜினி நாயுடு இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது, நாயுடு இந்தியத் தேசிய காங்கிரஸுடன் தொடர்பில் இருந்தார். மற்றும் அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவரது நன்கு அறியப்பட்ட கவிதைகளில் சில: 'த கோல்டன் த்ரெஷோல்ட்', 'தி பேர்ட் ஆஃப் டைம்', 'தி ஃபெதர் ஆஃப் தி டான்' ( The Golden Threshold', 'The Bird of Time', 'The Feather of the Dawn' ) போன்றவை முக்கியமானவை.
பர்ஷாத் (அவரது பேனா பெயர்) என்று பிரபலமாக அறியப்படும் ஷியாம் லால் குப்தா, இந்தியாவின் கொடிப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜந்தா உஞ்சா ரஹே ஹுமாரா'வை எழுதி மிகவும் பிரபலமானவர்.
இப்பாடல் இன்றும் கொடியேற்றத்தின் போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த பெருமையுடனும் தேசப்பற்றுடனும் பாடப்படுகிறது. கவிஞரும் பாடலாசிரியருமான ஷியாம் லால் குப்தாவுக்கு 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பின்னர் 1997 ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தால் அவரது நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது பிரபலமான முழக்கமாக இருந்த 'இன்குலாப் ஜிந்தாபாத்!' ஐ எழுதியவர் ஹஸ்ரத் மொஹானி. இன்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற இடதுசாரி கட்சியினர் மட்டுமல்ல, சமீபத்தில் டெல்லிக்கு அருகே போராடிய விவசாயிகளும் இம்முழக்கத்தை முழங்கினர். இந்திய சுதந்திர இயக்கத்தின் போது முக்கியமாகக் காதலைப் பற்றி கசல் வகை கவிதைகளைக் கவிஞர் ஹஸ்ரத் மோகன் எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவர்.
ஸ்ரீ அரவிந்தர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது சமஸ்தானமான பரோடாவில் ஒரு சிவில் தொழிலாளியாக பணியாற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது, அவர் தேசியவாத அரசியலில் இணைந்து நாட்டிற்காகப் போராடினார். ஆரம்பத்தில் புரட்சியாளராக இருந்த அவர் பின்னர் ஒரு ஆன்மீக சீர்திருத்தவாதியாக மாறினார். மனிதர்களின் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக பரிணாமம் பற்றிய தனது கருத்துக்களை அறிமுகப்படுத்தினார். புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்தைப் பாண்டிச்சேரியில் நிறுவியதற்காக அவர் அறியப்பட்டாலும், அவரது பிரபலமான சில இலக்கியப் படைப்புகளில் 'சாவித்ரி: எ லெஜண்ட் அண்ட் எ சிம்பல்' (ஒரு காவியக் கவிதை), ஒருங்கிணைந்த யோகா பற்றிய 'தி லைஃப் டிவைன்' ஆகியவை அடங்கும்.
மாகன்லால் சதுர்வேதி நியோ-ரொமாண்டிசிசம் என்றிழைக்கப்படும் இலக்கிய வகைக் காலத்தின் இந்தி கவிஞர். பிரபலமாக பண்டிட்ஜி என்று அழைக்கப்படும் சதுர்வேதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கட்டுரையாளராக இருந்தார். அதே நேரத்தில் தீவிர சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தார். அவரது தேசபக்தி கவிதைகளில் ஒன்று புஷ்ப் கி அபிலாஷா (ஒரு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாகவி பாரதியார், கவிஞராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். தேசபக்தி, இறைபக்தி மற்றும் ஆன்மீகம் குறித்த பல பாடல்களை இயற்றியுள்ளார்
இந்திய சுதந்திர இயக்கம், தேசபக்தி, தேசியவாதம் தொடர்பாகப் பல பாடல்களை இயற்றியதால், அவர் ஒரு தேசிய கவிஞராகக் கருதப்பட்டார். சுதந்திர இந்தியாவுக்கான தனது தொலைநோக்கு பார்வையையும், தனது பாடல்களில் கோடிட்டுக் காட்டினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust