”ரூ.6000 நிதியுதவி வேண்டும்” - தெலங்கானா ஆண்கள் வைத்த விநோத கோரிக்கை - எதற்காக?
”ரூ.6000 நிதியுதவி வேண்டும்” - தெலங்கானா ஆண்கள் வைத்த விநோத கோரிக்கை - எதற்காக? twitter
இந்தியா

”ரூ.6000 நிதியுதவி வேண்டும்” - தெலங்கானா ஆண்கள் வைத்த விநோத கோரிக்கை - எதற்காக?

Keerthanaa R

வழுக்கைத் தலையுடன் இருக்கும் ஆண்களுக்கு ரூ.6000 அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும் என்ற விநோத கோரிக்கையை வைத்துள்ளனர் தெலங்கானா ஆண்கள்.

முடி உதிருபவர்களுக்கு இருக்கும் பெரும் பயமே வழுக்கைத் தலையாகி விடுவோமோ என்பது தான். வழுக்கை தலையுடையவர்கள் நிச்சயமாக கேலி கிண்டலுக்கு ஆளாகியிருப்பார்கள். இது அவர்களை மனதளவில் பாதித்திருக்கும்.

அதற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளனர் தெலங்கானா பகுதியில் உள்ள ஆண்கள். சித்திப்பேட்டை தங்களபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் தங்களுக்கு வழுக்கை தலை இருப்பதால் ஊரில் எல்லோரும் அவர்களை கேலி செய்வதாகவும், இது மனவுளைச்சலை தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால், அரசு தங்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6000 தரவேண்டும் எனவும், பொங்கலுக்கு இந்த உதவித்தொகையை அரசு அறிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த பணம், அவர்கள் தினசரி சந்திக்கும் கொடுமைகளை எதிர்கொள்ள உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்றது, அதில் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். பொங்கலுக்கு பிறகு, தங்களது சங்கத்தில் இன்னும் சில பாதிக்கப்பட்ட ஆண்கள் சேருவார்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்

“கிராம மக்கள் சிலரின் கேலிப் பேச்சு எங்களை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. எங்களுக்கு முடி இல்லை, அல்லது குறைவாக இருக்கிறதென்று அவர்கள் சிரிக்கின்றனர். மனதளவில் எங்களை இது பாதிக்கிறது” எனக் கூறுகின்றனர்

இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு சங்கம் இல்லை என்றாலும், பாலய்யா என்ற 51 வயது நபர் இவர்களின் தலைவராக செயல்படுகிறார். இந்த குழுவில் ஒரு 22 வயது இளைஞரும் உறுப்பினராக இருக்கிறார்.

அரசு கொடுக்கும் இந்த உதவித்தொகையை வைத்து அவர்கள் மீண்டும் முடி வளர மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கின்றனர்.

வயதானவர்கள், மாற்று திறனாளிகள், கணவனை இழந்த பெண்களுக்கு அரசு உதவித்தொகை தருவதை போல தங்களுக்கும் மாதாமாதம் உதவித்தொகை வேண்டும் என்பது இவர்களின் வேண்டுகோள்.

“இப்படியான கோரிக்கையை முன்வைத்ததற்கு அவர்களை பார்த்து யாரும் எள்ளி நகையாடவேண்டாம். அவர்களின் மனனிலையை புரிந்துகொள்ளவேண்டும்” என கிராமவாசி ஒருவர் குறிப்பிடுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!