Mahua Moitra twitter
இந்தியா

மஹூவா மொய்த்ரா : நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கர்ஜித்த திரிணாமூல் எம்.பி

NewsSense Editorial Team

குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறைக்கு அளவு கடந்த அதிகாரத்தை வழங்கும் குற்றவியல் அடையாள மசோதா கடந்த திங்களன்று (2022) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்த்துப் பேசினர்.

திரிணாமூல் காங்கிரசின் மஹூவா மொய்த்ராவும் இதைக் கண்டித்து பேசினார். தனிநபர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க, காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகப்படியான அதிகாரங்களை இந்த மசோதா வழங்குவதாக அவர் விமர்சித்தார்.

“இன்று நீங்கள் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறீர்கள். இது மிகவும் ஆழமாகவும், அசல் சட்டத்தை விட அதிகமான தரவுகளையும் சேகரிக்கிறது. மேலும் 1920 - ல் பிரிட்டீசார் இந்த சட்டத்தை சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் தேசிய சக்திகளை ஒடுக்குவதற்காக கொண்டு வந்தது. இன்று பிரிட்டீஷ் ஆட்சி இல்லை. இந்தியா ஒரு சுதந்திர நாடு. ஆனால் இத்தகைய காலனிய கொடுங்கோன்மை சட்டம் எதற்கு? தற்போதைய சட்டம், பிரிட்டீசார் குற்றவாளிகளுக்கு கொடுத்திருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகளை கூட ரத்து செய்து விட்டது.” என்றார் மொய்த்ரா.

Mahua Moitra

இந்த அரசாங்கம், இந்த புதிய சட்டத்திருத்தத்தை விசாரணை நடைமுறைகளை மேம்படுத்தி தண்டனை அளிப்பதை அதிகரிப்பதாக கூறுகிறது.

1920 சட்டம் போலீசாருக்கு, குற்றம் சாட்டப்பட்டோரின் கைரேகை மற்றும் கால் தடங்களை எடுப்பதற்கு மட்டும் அதிகாரம் அளித்தது. தற்போதைய மசோதா அனைத்து வகை அச்சுப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியில் மாதிரிகள், கையெழுத்து, குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பண்புகள் ஆகியவற்றை போலீசார் சேகரிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது.

இதை யாருக்கு பயன்படுத்தலாம் பயன்படுத்துக் கூடாது என்பதில் தெளிவில்லை என்றார் மொய்த்ரா. பாஜக அரசு தன்னை எதிர்ப்போரைக் கூட இப்படி குற்றவாளி என்று சொல்லி தகவல்களை சேகரிக்கலாம். இது தனிநபர் தரவுகளின் பிரைவசி - தனியுரிமையை மதிக்காமல் அதை பயன்படுத்தும் கேடான நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

Act 1992

1920 சட்டத்தின் படி, காவல்துறை உதவி ஆய்வாளருக்கு குறைவில்லாத அதிகாரிதான் குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளங்களை சேகரிக்க முடியும். தற்போது அதை தலைமைக் காவலர் என்று குறைத்து விட்டார்கள். இனி ஒரு சாதாரண ஏட்டையா கூட அரசின் விருப்பப்படி குடிமக்கள் எவரையும் அரசின் குற்றப் பதிவு காப்பகத்தில் கொண்டு வரமுடியும். தண்டனையையும் வாங்கித் தர முடியும்.

1920 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் சட்டம், ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான தண்டனையை உள்ளடக்கிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபரின் அடையாளங்களை சேகரிக்க அனுமதிக்கிறது. தற்போதைய சட்டப்படி ஒரு நபர் கைது செய்யப்பட்டாலே போதும் அவரது அனைத்து அடையாளங்களையும் சேகரிக்க முடியும். அது குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அல்ல.

ஒரு வருடத்திற்கும் குறைவான தண்டனை விதிக்கப்படும் குற்றங்களுக்கு கூட அடையாளங்கள் சேகரிக்கப்படலாம். மேலும் தடுப்புக் காவல் சட்டங்கள், தேசத்துரோக சட்டம், உபா சட்டம் போன்றவற்றில் கைது செய்யப்படும் நபர்களின் அடையாளங்களையும் சேகரிக்கலாம். மேலும் விசாரணைக்கு உதவிடும் பொருட்டு ஒரு நபர் கைது செய்யப்பட்டாலும், கைதாகவில்லை என்றாலும் அவரிடமிருந்து தரவுகளை சேகரிக்க நீதிபதி உத்தரவிடலாம்.

parliament

மேலும் எந்த ஒரு சட்ட அமாக்க நிறுவனத்திற்கும் (போலீஸ், சிபிஐ, உளவுத்துறைகள், என்ஐஏ போன்றவை) நபர்களின் தரவுகளை சேகரிக்கவும், சேமிக்கவும், பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தை இந்த மசோதா அனுமதிக்கிறது.

எந்த ஒரு குற்றத்தையும் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்கு தொடரும் நோக்கத்திற்காக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் இச்செயல்களை செய்ய முடியும். இதையெல்லாம் மொய்த்ரா தரவுகளுடன் அம்பலப்படுத்தி பேசினார்.

மேலும் அவர் உபா சட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 5000 பேர் கைது செய்தாலும் 2.5% பேர்கள்தான் குற்றம் சாட்டப்பட்டதை சுட்டிக் காட்டினார். உபா சட்டதிருத்தம் வந்த போது மக்களவை சபா நாயாகர் ஓம் பிர்லா அதை ஆதரித்துப் பேசியதை கூறினார். உடனே சபாநாயகர் தான் அப்படி பேசவில்லை என்று மறுத்தார். இரண்டு பாஜக அமைச்சர்களும் எழுந்து மொய்த்ரா தவறாக பேசுவதாக கூச்சலிட்டார்கள். ஆனால் தான் பேசியதற்கு அவைக் குறிப்புகளில் ஆதாரம் உள்ளதாக மொய்த்ரா கூறினார். இதனால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு மொய்த்ரா இந்த புதிய சட்ட மசோதாவை கண்டித்துப் பேசினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?