தன்னந்தனியாக டிரிப் செல்ல ஆசையா? இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லலாம்! Canva
இந்தியா

தன்னந்தனியாக டிரிப் செல்ல ஆசையா? இந்தியாவின் இந்த இடங்களுக்கு செல்லலாம்!

சென்று பார்த்தால் தானே தெரியும்? தனியாக செல்வதில் ஒரு தனி திரில் இருக்கிறது. அப்படி தனியாக டிரிப் செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கான தொகுப்பு தான் இது.

Keerthanaa R

சுற்றுலா சென்று வரலாம் என்று யோசிக்கும் போது நாம் தனியாக சென்றால் நன்றாகயிருக்கும் என்று யோசித்திருப்போம். ஆனால் எங்கு செல்வது, தனியாக நம்மால் சமாளித்துவிட முடியுமா என்ற கேள்விகள் நமக்குள் நிறைய முறை வந்திருக்கலாம்.

சென்று பார்த்தால் தானே தெரியும்? மேலும் தனியாக செல்வதில் ஒரு தனி திரில்லும் இருக்கிறது. அப்படி தனியாக டிரிப் செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கான தொகுப்பு தான் இது.

இந்தியாவில் இருக்கும் இந்த இடங்களுக்கு ஒரு சோலோ ட்ரிப் சென்றுவாருங்கள்

உதய்பூர், ராஜஸ்தான்

கலாச்சாரத்திற்கும், அதன் பழமையான கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரம். இதனை ஏரிகளின் நகரம் என்று அழைக்கின்றனர்.

இங்கு ராஜா காலத்து கோட்டைகள், ஏரிகள், பழம்பெரும் கோவில்கள், வண்ணமயமான சந்தைகள் அமைந்துள்ளன. இது ஒரு ரொமாண்டிக்கான ஹனிமூன் ஸ்பாட் கூட்.

சோலோ ட்ரிப் செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்கள் தனியாக, பாதுகாப்பாக சுற்றுலா செல்ல சிறந்த இடம் உதய்பூர்.

இங்குள்ள பிச்சோலா ஏரி, ஜைசமந்த் ஏரி, தூத் தலாய் மியூசிக்கல் கார்டன் உள்ளிட்டவை பிரபலம்

ஹம்பி, கர்நாடகா

யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களுள் ஒன்றான ஹம்பி நகருக்கு அறிமுகம் தேவையில்லை. கர்நாடகாவின் அடையாளமாகவே கிட்ட தட்ட கூறப்படும் ஹம்பி ஆன்மீக ஆர்வலர்கள் மட்டுமல்ல, ஊர் சுற்ற விரும்பும் வேண்ட்ர்லஸ்ட்களுக்கும் ஏற்ற இடம் தான்.

இதனை தொலைந்த நகரம் என்றும் அழைக்கின்றனர். விஜயநகர ஆட்சி வீழ்ந்த பிறகு, அழிக்கப்பட்ட நகரத்தில் இருக்கும் மிச்சங்களே தற்போது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் விசையாக இருக்கிறது.

இங்குள்ள விருபக்‌ஷா கோவில், சனப்பூர் ஏரி, சுக்ரீவர் குகை உள்ளிட்ட இடங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள். பரிசல் சவாரியையும் மிஸ் செய்துவிட வேண்டாம்

வர்கலா, கேரளா

கேரளாவின் அழகிய கடற்கரை நகரம், இளசுகளின் ஃபேவரட் ஸ்பாட். இங்கு சூரியன் அஸ்தமனமாவதை கண்டு ரசிக்கலாம்

இங்கு கடற்கரைக்கு அருகில் ஒரு சிறிய க்ளிஃப் (பாறை) இருக்கிறது. இந்த க்ளிஃபில் நிறைய கஃபேக்கள் இருக்கின்றன. சாப்பிட்டுக்கொண்டே இயற்கையின் அழகை நீங்கள் ரசிக்கலாம்.

சீசன் டைமில் செல்வது ஒரு பக்கம் குதூகலமாக இருந்தாலும், ஆஃப் சீசனில் செல்வது இன்னும் சிறந்தது.

லடாக், காஷ்மீர்

சோலோ ட்ரிப், பைக் ட்ரிப், க்ரூப் ட்ரிப் என எதுவாக இருந்தாலும் ஏதுவாக இருக்கும் இடம் இந்த லடாக். நெடுஞ்சாலைகளின் நகரமான இது அழகிய பனிமூடிய மலைகள் நிறைந்தது. இங்கு காந்த மலை இருக்கிறது. இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே டிரெக்கிங்கும் செல்லலாம்

டார்ஜலிங், மேற்கு வங்கம்

தேநீருக்காக ஃபேமஸ் ஆக இருக்கும் டர்ஜிலிங், இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய தலமாகும். மேற்கு வங்கத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடம், மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது.

இங்கு திபெத்திய பாரம்பரியங்கள், கலைநயங்களை காணலாம்.

டார்ஜிலிங்கின் சிறப்பம்சமே, பொம்மை ரயில் பயணம் தான். இந்த டாய் டிரெயினில் பயணிக்க உலகளவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு அமைந்துள்ள கஞ்செஞ்சுங்கா சிகரம், உலகில் மூன்றாவது உயர்ந்த சிகரமாகும்.

தவிர இங்கு பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?