ஆண்கள் மட்டுமே வெளியில் சென்று சம்பாதிக்க வேண்டும், பெண்கள் வீடில் தான் முடங்கி இருப்பார்கள் என்ற காலம் மலையேறி போய்விட்டது. ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலுமே பெண்கள் சாதிக்க தொடங்கிவிட்டனர்.
பெண்கள் தலைத் தூக்க தொடங்கியுள்ள துறைகளில் விமான பணிகளும் அடங்கும். சோயா அகர்வால் உள்பட பல பெண் விமானிகளை பற்றிய ஊக்குவிக்கும் கதைகளை நாம் கடந்திருப்போம்.
எனில் உலகில் எந்த நாடு அதிக அளவில் பெண் விமானிகளை கொண்டுள்ளது? அதில் இந்தியாவின் இடம் என்ன? இந்த பதிவில்
தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. 12.4 சதவிகிதம் பெண் விமான ஓட்டிகளை கொண்டுள்ளது இந்தியா. அதிலும் பிரதானமான ஏர்லைன்களில் பணிபுரிகின்றனர் பெண்கள்.
வியான் நியூஸ் அறிக்கையின்படி, உலகில் வேறு எந்த நாட்டிலும் 10 சதவிகிதத்திற்கு மேல் பெண் விமானிகள் இல்லை
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது அயர்லாந்து நாடு. இங்கு 9.9 சதவிகிதம் பெண் விமானிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
இந்த நாட்டிலும் 9.8 சதவிகித பெண் விமானிகள் பணியில் உள்ளனர். பெண்கள் மென்மேலும் முன்வந்து விமானம் தொடர்பான பணிகளில் இணைய, அதற்கான முறையான கல்வி வழங்க அந்நாட்டு அரசு பல முன்னெடுப்புகளை கையாள்கிறது
இந்தியாவை விட 2.4 மடங்கு, அதாவது 135 சதவிகிதம் பெரிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால் இங்கு 7.5 சதவிகிதம் தான் கமர்ஷியல் பெண் விமானிகள் உள்ளனர்.
இங்கு 7 சதவிகிதம் பெண் விமானிகள் பணியில் உள்ளனர்.
இதை தவிர ஜெர்மனியில் 6.9 சதவிகிதம் பெண் விமானிகள் உள்ளனர். உலகளவில் 5.8 சதவிகிதம் பெண் விமானிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust