Summer லீவில் இந்தியாவின் இந்த underrated இடங்களுக்கு சென்று வரலாமே? canva
இந்தியா

Summer லீவில் இந்தியாவின் இந்த underrated இடங்களுக்கு சென்று வரலாமே?

யூஸ்மார்க் பள்ளத்தாக்கை, இயேசுவின் புல்வெளி - The meadow of Jesus என்று அழைக்கின்றனர். இயேசு கிறிஸ்து ஒரு முறை இந்த இடத்திற்கு வந்து சென்றதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

Keerthanaa R

சம்மர் வெகேஷன் இன்னும் ஒரு மாதக் காலம் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் நீங்கள் எங்கும் வெளியில் போகவில்லை என்றால் இப்போதும் கூட போகலாம்.

ஏற்கனவே வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் போதாக்குறைக்கு அக்னி நட்சத்திரமும் சேர்ந்துக் கொண்டுள்ளது. ஆகையால், உங்களின் ட்ரிப்களை பிளான் செய்துகொள்வது சிறந்த ஐடியாவாக தான் இருக்கும்.

வெர்ல்டு டூர் எல்லாம் கூட வேண்டாம், இந்தியாவிற்குள்ளேயே போகலாம். இந்த கட்டுரையை பார்த்து இடங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்

வால்பாறை, தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதியில் அமைந்திருக்கிறது வால்பாறை. இங்கு புலிகள் காப்பகம் இருக்கிறது, தவிர கரடி, யானை, சிறுத்தை குரங்குகள் போன்ற காட்டு விலங்குகளையும் காணலாம். தவிர பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், எரவிக்குளம் தேசியப் பூங்காவும் உண்டு

மலைப்பிரதேசமான இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. வால்பாறை தேயிலை தோட்டங்களுக்கும் பிரபலம். இங்கு சஃபாரி, மலையேற்றம் கூட செய்யலாம்.

அருகில் பொள்ளாச்சியும் இருப்பதால், அப்படியே அங்கும் சென்று வரலாம்

யூஸ்மார்க், காஷ்மீர்

காஷ்மீரின் அதிகம் அறியப்படாத அதிசயம் இந்த யூஸ்மார்க் மலைப்பகுதி. இங்குள்ள சாங் - இ - சஃபத் பள்ளத்தாக்கு கண்டிப்பாக பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று. இங்கு தான் உறைந்த ஏரி அமைந்துள்ளது.

யூஸ்மார்க் பள்ளத்தாக்கை, இயேசுவின் புல்வெளி - The meadow of Jesus என்று அழைக்கின்றனர். இயேசு கிறிஸ்து ஒரு முறை இந்த இடத்திற்கு வந்து சென்றதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு அழகிய நிலப்பரப்புகள், பைன் மர நர்சரிகள், நீல்நாங் ஏரி, தூத்நாக் ஏரி இருக்கின்றன. இந்த நீல்நாங் ஏரி இருக்கும் பகுதியில் டிரெக்கிங் செய்யலாம். 10 கிலோமீட்டர் டிரெக் செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள சாங் - இ - சஃபத் பள்ளத்தாக்கை அடையலாம். நீல்நாங் ஏரியின் அடர் நீல நிற தண்ணீருக்காகவே இதன் பெயர் நீல்நாங் என்று அழைக்கப்படுகிறது

மாண்டு, மத்திய பிரதேசம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை நகரம் மத்திய பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் கட்டிடக்கலையை பறைச்சாற்றும் சில சிறந்த கட்டுமானங்கள் மாண்டுவில் அமைந்துள்ளன.

இங்குள்ள கப்பல் கோட்டை, ஜோதிர்லிங்கம் கோவில்கள், ஹோஷாங் ஷா கல்லறை, ஹிண்டோலா மஹால் மிகப் பிரபலம்.

லெப்ச்ஹாகட், மேற்கு வங்கம்

ரகசியமாய் மேற்கு வங்கத்தில் ஒளிந்திருக்கும் அழகு இந்த லெப்ச்ஹாகட். இயற்கை காதலர்களுக்கு இது ஒரு சிறந்த ஸ்பாட்! ஹனிமூன் போகவும்.

பனி படர்ந்த கன்செஞ்சுங்கா மலைகள் கண்ணுக்கு இனிய காட்சியாக இருக்கும். உயரமான பைன் மரங்கள் இங்கு ஏராளம். ஹவா கர், கம் ராக் உள்ளிட்ட இடங்களையும் நிச்சயம் பார்க்கவேண்டும். இந்த ஹவா கர் பகுதியில் அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது சுத்தமான காற்றை நாம் சுவாசிக்கலாம், சன்ரைஸ் பார்க்கலாம்.

இங்கு bird watchingகும் உண்டு

பங்காரம் தீவு, லட்சத்தீவு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இந்த தீவில் மனிதர்களும் வாழ்கின்றனர். இந்த தீவில் அமைந்திருக்கும் நீர்நிலைகளில் தண்ணீர் கண்ணாடி போல பளிச்சென்று இருக்கும்.

பெங்களூரு, கொச்சின், சென்னை விமான நிலையங்களில் இருந்து இந்த பங்காரம் தீவிற்கு செல்லலாம். மழைக்காலத்திலும் குளிர்க்காலத்திலும் சென்றுவர இது சிறந்த சாய்ஸ். இங்கு ஸ்கூபா டைவிங் செய்யலாம், கடற்கரைகளில் அமைந்திருக்கும் ரெஸ்டாரண்ட்களில் அமர்ந்தவாறு, கடலை ரசித்துக்கொண்டு வித விதமான உணவுகளை ருசிக்கலாம்

லம்பாசிங்கி, ஆந்திர பிரதேசம்

தென்னிந்தியாவின் காஷ்மீர் என்றழைக்கப்படுகிறது இந்த லம்பாசிங்கி கிராமம். ஆந்திராவின் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த காட்டுப்பகுதியானது, ஒரு வீக்கெண்டில் சென்று பார்த்து வர நல்ல இடம்.

தென்னிந்தியாவில் இந்த பகுதியில் மட்டும் தான் பனிப்பொழிவு ஏற்படும். இங்கு தேயிலை, காபி, ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி தோட்டங்கள் உள்ளன.

இங்கு அரிய வகை பறவைகளை காணலாம். உலக புகழ் பெற்ற பறவையியலாளர்களான டிரெவர் பிரைச், கெ எஸ் ஆர் கிருஷ்ண ராஜு உள்ளிட்டோர் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?