Travel: வேர் பாலம் முதல் மாஸ்மாய் குகைகள் வரை - Cherrapunji யில் மிஸ் செய்யகூடாத இடங்கள் கான்வா
இந்தியா

Travel: வேர் பாலம் முதல் மாஸ்மாய் குகைகள் வரை - Cherrapunji யில் மிஸ் செய்யகூடாத இடங்கள்!

சிரபுஞ்சிக்கு செல்வதாக இருந்தால், அவ்விடத்தை பற்றி சற்றே தெரிந்துகொள்ளுங்கள், அங்கு சென்று இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இடங்களுக்கும் சென்று வாருங்கள்

Keerthanaa R

சம்மர் வந்து கிட்ட தட்ட ஒரு மாதக் காலம் முடிந்துவிட்டது. இந்த டைமில் வெயிலில் இருந்து தப்பிக்கவும், குழந்தைகள், குடும்பத்தினருடன் வெகேஷனை எஞ்சாய் செய்யவும் பல இடங்களுக்கு டூர் செல்வது வழக்கம்.

அதில் சில இடங்கள் நிச்சயம் பார்த்தே ஆகவேண்டும் என நம் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு இடம் தான் சிரபுஞ்சி.

இந்திய மாநிலமான மேகாலயாவில் அமைந்திருக்கிறது சிரபுஞ்சி. மழைக்காடான இந்த இடத்தை சோரா என்று அழைக்கின்றனர். சிரபுஞ்சிக்கு செல்வதாக இருந்தால், அவ்விடத்தை பற்றி சற்றே தெரிந்துகொள்ளுங்கள், அங்கு சென்று இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டிருக்கும் இடங்களுக்கும் சென்று வாருங்கள்

வாழும் வேர் பாலங்கள்

சிரபுஞ்சியின் பிரதானமான அடையாளங்களில் முதன்மையான ஒன்று இந்த உயிர்வாழும் வேர் பாலங்கள். இதனை அங்கு வாழும் காசி பழங்குடி மக்கள் உருவாக்கியுள்ளனர். மரங்களின் வாழும் வேர்களை பின்னி இந்த பாலங்கள் அமைக்கப்பட்டன

இவை 600 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது, 15 முதல் 250 அடி நீளமானவை. ஒற்றை வேர்பாலங்கள், டபுள் டெக்கர் வேர்பாலங்கள் உள்ளிட்டவை உள்ளன.

டிரெக்கிங்

சிரபுஞ்சி டிரெக்கிங் செல்ல ஒரு சிறந்த இடம். இங்குள்ள நாகிராய்ட் கிராமத்திற்கு டிரெக்கிங் செய்து தான் செல்லமுடியும். தவிர மாவிலாங் கிராமத்திற்கும் டிரெக்கிங் செய்து செல்லலாம்

அருவிகள்

சிரபுஞ்சியில் அருவிகளுக்கு பஞ்சமில்லை. இங்கு இருக்கும் செவன் சிஸ்டர் ஃபால்ஸ் இந்தியாவின் 4வது உயரமான அருவி.

நோகலிகை நீர்வீழ்ச்சி, டைந்தெலன் நீர்வீழ்ச்சி, கைன்ரெம் நீர்வீழ்ச்சி நிச்சயம் பார்க்கவேண்டியவை

ஜடோ உணவு

அதிகம் காரம் தரும் உணவு வகைகளை இவர்கள் பயன்படுத்துவதில்லை, வெங்காயம், மஞ்சள், இஞ்சி போன்றவை இவர்களின் உணவுகளில் பிரதானமாக இருக்கும்.

இவர்கள் உணவை சமைக்க இரண்டு பாணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்; ஒன்று smoked (புகைத்த வாடையுடைய உணவுகள்) மற்றொன்று fermenting (புளிக்கவைப்பது)

லால் சா (சிகப்பு நிற தேநீர்), ஜாடோ இவர்களின் பிரபலமான உணவு வகைகள்

மவ்லின்னாங் கிராமம்

இது ஆசியாவின் சுத்தமான கிராமங்களில் ஒன்று. சிரபுஞ்சியிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் வேர் பாலங்கள் மற்றும் மர வீடுகள் (ட்ரீ ஹவுஸ்) பிரபலம்.

இங்கு நிச்சயம் சென்று வாருங்கள்

மாஸ்மாய் குகை

சிரபுஞ்சியின் பிரபலமான குகைகளில் ஒன்று இந்த மாஸ்மாய் குகை. குகைக்குள் சென்று பார்க்க, வளைந்து, குனிந்து, நெளிந்து கிட்டதட்ட பரதநாட்டியமே ஆடவேண்டும். இதை தவிர இங்குள்ள அர்வா குகையும் பிரபலம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?