Types of red chilli available in India Instagram
இந்தியா

இந்தியாவில் இருக்கும் மிளகாய் வகைகள் என்ன? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

காஷ்மீரி மிளகாய் முதல் நறுமணத்தை தரும் பைடகி மிளாகாய் வரை இந்தியாவில் கிடைக்கும் மிளகாய் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Priyadharshini R

நமது இந்தியா உணவு வகைகளில் தனக்கென தனி அங்கீகாரத்துடன் உள்ளது. பல உணவு வகைகள் இந்தியாவில் இருந்தாலும் சமையல் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றுதான் மிளகாய். காஷ்மீரி மிளகாய் முதல் நறுமணத்தை தரும் பைடகி மிளாகாய் வரை இந்தியாவில் கிடைக்கும் மிளகாய் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காஷ்மீரி மிளகாய்

காஷ்மீர் பகுதியில் உருவான இந்த மிளகாய் அடர்சிவப்பு நிறத்தில் இருப்பதால் ரோகன் ஜோஷ் மற்றும் தந்தூரி சிக்கன் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ரோகன் ஜோஷ் என்பது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் கறி உணவாகும். மேலும் காஷ்மீர் மிளகாய் தூள் இந்தியாவில் உள்ள சமையலறைகளில் பிரதான பொருளாக உள்ளது.

பைடகி மிளகாய்

இந்திய மாநிலமான கர்நாடகாவில் விளையும் பிரபலமான மிளகாய் தான் பைடகி மிளகாய். அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த மிளகாய் அதன் காரத்தன்மை மற்றும் நறுமணத்திற்காக தென்னிந்திய சமையல்களில் பயன்படுத்தப்படுகின்றது .

குறிப்பாக சாம்பார், ரசம் மற்றும் சட்னி போன்ற உணவுகளை தயாரிக்க பைடகி மிளகாய் பயன்படுகிறது.

குண்டூர் மிளகாய்

ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியில் விளையும் இந்த மிளகாய், பல தென்னிந்திய உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. அதே சமயம் ஆந்திர உணவு வகைகளில் காரமான கறிகள், ஊறுகாய்கள் மற்றும் சட்னி தயாரிக்க குண்டூர் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

காந்தாரி மிளகாய்

பறவையின் கண் வடிவத்தில் இருக்கும் காந்தாரி மிளகாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதிகளிலும் நீலகிரி, பந்தலுார், கூடலுார் பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகிறது. இதன் நிறம் மற்றும் காரத்தன்மையின் காரணமாக ஊறுகாய் மற்றும் பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது

குறிப்பாக கேரள உணவில் பிரபலமான காந்தாரி மிளகு சட்னி தயாரிக்கவும் மசால பொருட்களில் சேர்க்கவும் காந்தாரி மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

தானி மிளகாய்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் விளையும் தானி மிளகாய், பச்சை மிளகாய் என அழைக்கப்படுகிறது. பஜ்ஜிகள் செய்ய பயன்படுத்தப்படும் தானி மிளகாய் இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சங்கேஷ்வரி மிளகாய்

கர்நாடகாவின் சங்கேஷ்வர் பகுதியில் விளையும் இந்த மிளகாய் இறைச்சி உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மசால பொருட்களில் உலர் பொடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கோஸ்ட் மிளகு

கோஸ்ட் பெப்பர் என்றும் அழைக்கப்படும் இந்த மிளகாய் மிகவும் காரமான மிளகாய்களில் ஒன்றாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஊறுகாய், சட்னி மற்றும் காரமான சாஸ்கள் தயாரிக்க கோஸ்ட் பெப்பர் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?