Unique culture and traditions of Mawlynnong village Twitter
இந்தியா

Mawlynnong : காசி பழங்குடியினரின் தனித்துவமான கிராமம் - 5 அடடே தகவல்கள்!

Priyadharshini R

ஆசியாவிலேயே தூய்மையான கிராமங்களில் ஒன்றாக அறியப்படும் மவ்லின்னாங் கிராமம், இந்தியாவிலேயே மிகவும் தனித்துவமான இடமாக கருதப்படுகிறது.

இயற்கை காட்சிகள் முதல் தனித்துவமான கலாச்சார மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் என மவ்லின்னாங்கில் பிரமிக்க வைக்ககூடிய ஏராளமான விஷயங்கள் உள்ளன.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்தல், சுகாதாரத்தை பராமரிக்க பார்வையாளர்களை ஊக்குவித்தல் போன்ற சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்கு ஒரு உதாரணமாக இந்த கிராமம் திகழ்கிறது.

மேகாலயா ஷில்லாங்கிலிருந்து சுமார் 90 கிமீ தொலைவில் மவ்லின்னாங் கிராமம் அமைந்துள்ளது. கிராமப்புற அழகை அனுபவிக்க விரும்புவோர் மற்றும் காசி பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையைக் காண விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்

மாவ்லின்னாங் ஆசியாவிலேயே தூய்மையான கிராமங்களில் ஒன்றாகும். கிராம மக்கள் தங்கள் கிராமத்தை பராமரித்து தூய்மையாக வைத்திருப்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

கிராமத்தை தூய்மையாக பராமரிப்பதில் உள்ளூர்வாசிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஒவ்வொரு இடங்களிலும் குப்பை தொட்டிகள் உள்ளன.

ரூட் பாலம்

ரிவாய்-ல் அமைந்துள்ள ரூட் பாலத்தை காண, மவ்லின்னாங் கிராமத்திலிருந்து சுமார் 8 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். அங்கு இருக்கும் பாலத்தை கண்டு நிச்சயம் திகைப்பீர்கள்.

இந்த பாலங்கள் ஒரு தனித்துவமான இயற்கை அழகினை கொண்டு பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

இயற்கை அழகு

மவ்லின்னாங் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

நீர்வீழ்ச்சிகள், ஓடைகள் மற்றும் காடுகள் உள்ளிட்ட இயற்கை அழகுகளால் சூழப்பட்ட கிராமம் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது.

தனித்துவமான மூங்கில் பாலங்கள்

மூங்கில் பாலங்கள் மேகாலயாவின் கிராமப்புற நிலப்பரப்பின் தனித்துவமான அம்சமாகும்.

இந்த பாலங்களை உள்ளூர்வாசிகள் மூங்கிலை பயன்படுத்தி கட்டியுள்ளனர். இதனை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறும் அமைத்துள்ளனர்.

சமநிலைப்படுத்தும் பாறை

மவ்லின்னாங்கின் பேலன்ஸிங் பாறை ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல், உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகவும் உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?