UP CM office  Twitter
இந்தியா

உத்தர பிரதேச முதல்வர் யோகி டுவிட்டர் கணக்கு ஹேக்: குரங்கு புகைப்படங்களை வைத்து அட்டூழியம்

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை நேற்றிரவு ஹேக் செய்யப்பட்டதையடுத்து, தற்போது சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Priyadharshini R

5 மாநில தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். ஹேக் செய்த மர்ம நபர்கள் #CMofofficeUP டுவிட்டர் பக்கத்தில் முகப்புப் படமாக வைக்கப்பட்டிருந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் படத்தை எடுத்துவிட்டு கார்ட்டூன் குரங்கு படத்தை வைத்துள்ளனர்.

yogi adityanath

அதுமட்டுமின்றி தொடர்ந்து சில மணி நேரம் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்து பல டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து மர்ம நபர்கள் அட்டூழியம் செய்து வந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிவிட்டர் பக்கத்தை மீட்கவும், ஹேக் செய்தவர்களை கண்டுபிடிக்கவும் அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில் ஹேக் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தற்போது சரிசெய்யப்பட்டு, மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உ.பி முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு 4 மில்லியன் ஃபலோவர்ஸ் களை கொண்டுள்ளதால் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தை உடனடியாக ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.


Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?