8ஆம் நூற்றாண்டு தொலைந்து போன கோவில் கண்டுபிடிப்பு - ஆனால் மீண்டும் மாயமானது எப்படி? Twitter
இந்தியா

8ம் நூற்றாண்டில் தொலைந்து போன கோவில்; தேடி கண்டுபிடித்த ASI - மீண்டும் மாயமானது எப்படி?

குடும்பரி கோயிலின் இடிபாடுகள் 2000 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையால் (ASI) கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மர்மமான முறையில் இந்த இடிபாடுகள் அங்கு காணப்படவில்லை.

Priyadharshini R

இந்தியா மர்மங்களின் பூமி என்றே சொல்லாம். நீரில் மூழ்கிய நகரம் முதல் திகில் கிராமம் வரை பல மர்மங்களை வைத்திருக்கும் பல இடங்கள் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட மர்மங்களில் ஒன்று 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடும்பரி கோயிலாகும். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) பதிவேடுகளில் தொலைந்து போனதாக பதிவு செய்யப்பட்ட கோவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

பசுமையான மலைகளுக்கு மத்தியில் 8ஆம் நூற்றாண்டு தொலைந்து போன ஒரு பழமையான இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அல்மோரா மாவட்டத்திற்கு அருகில் உள்ள துவாரஹத்தில் குடும்பரி கோயிலின் இடிபாடுகள் 2000 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையால் (ASI) கண்டுபிடிக்கப்பட்டது.

ASI இன் கணக்கெடுப்பு, 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள் 2020 இல் மறைந்துவிட்டதாகக் கூறுகிறது. பின்னர், ஜனவரி 2023 இல், இந்தியாவில் இழந்த 50 நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இந்த கோயிலின் பெயரை சேர்க்க ASI முடிவு செய்தது. 

ஆனால் சமீபத்தில் அவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. என்ன வித்தியாசம் என்றால் கோயிலின் அமைப்பு இப்போது இல்லை. மாறாக, கிராமம் முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். 

இந்த பாரம்பரிய நினைவுச்சின்னம் அதன் அசல் வடிவத்தில் இல்லை, அதன் எச்சங்கள் பல சுற்றுப்புற வீடுகளில் உள்ளன. அதாவது கிராம மக்கள் கோயிலின் எஞ்சிய பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளை கட்டியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர்வாசிகள் கோயிலின் இடிபாடுகளை தெரிந்தே கட்டுமானப் பொருட்களாக பயன்படுத்தவில்லை அதன் வரலாறு அறியாமல் அதனை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தொல்லியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் TOI- யிடம் துவாரஹத்தில் கோவில் பொருட்கள் இருந்த வீடுகளைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

துவாரஹத் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இல்லாவிட்டாலும், இந்த கிராமத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயம் இந்த இடத்தை சென்று பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?