Valentine's Day: நீங்க சிங்கிளா? அப்போ பிரியாணி ஃப்ரீ! பலே ஆஃபரை அறிவித்த உணவகம்- எங்கே? canva
இந்தியா

Valentine's Day: நீங்க சிங்கிளா? அப்போ பிரியாணி ஃப்ரீ! பலே ஆஃபரை அறிவித்த உணவகம் - எங்கே?

“நீங்கள் சிங்கிளா? சோகம் வேண்டாம். காதலர் தினத்தன்று உங்களை ஸ்பெஷலாக உணரவைக்க கானா கசானா இருக்கிறது” என்று கூறி, சிங்கிளாக இருப்பவர்களுக்கு எல்லாம் அரை பிளேட் பிரியாணி இலவசம் என்று அறிவித்திருந்தது

Keerthanaa R

காதலர் தினத்தை முன்னிட்டு, சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது அசாம் மாநிலத்திலுள்ள உனவகம் ஒன்று.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. காதலைப் போற்றும் இத்தினத்தில், பல்வேறு கொண்டாட்டங்கள் நடக்கும். சலுகைகள் அறிவிக்கப்படும்.

அப்படி, அசாமில் உள்ள ஒரு உணவகமும், வேலண்ட்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

கானா கசானா என்ற அந்த உனவகம் வெளியிட்டிருந்த விளம்பரத்தில் இரு வேறு சலுகைகள் இருந்தன.

ஒன்று, பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை அனைத்து வகை உணவுகளுக்கும் விலையில் 25% தள்ளுபடி இருக்கும். பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று 10 சதவிகித தள்ளுபடி கிடைக்கும் “உணவோடு உங்கள் பந்தத்தை வலுவாக்கிக்கொள்ளுங்கள்”

தொடர்ந்து அடுத்த சலுகை,

“நீங்கள் சிங்கிளா? சோகம் வேண்டாம். காதலர் தினத்தன்று உங்களை ஸ்பெஷலாக உணரவைக்க கானா கசானா இருக்கிறது” என்று கூறி, சிங்கிளாக இருப்பவர்களுக்கு எல்லாம் அரை பிளேட் பிரியாணி இலவசம் என்று அறிவித்திருந்தது.

பிரியாணி

டைம்ஸ் நவ் தளத்திடம் அந்த உணவகத்தின் உரிமையாளர் சிரஞ்சீவ் கோஸ்வாமி பேசியபோது, “ஆம், சிங்கிள்களுக்கு அரை பிளேட் பிரியாணி இலவசமாக வழங்கப்படும். அவர்களும் கொண்டாட ஒரு காரணம் வேண்டாமா?” என்றார்.

ஆனால், வருபவர் நிஜமாகவே சிங்கிள் தானா என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் எனக் கேட்டபோது, அது கடினம். ஆனால் யாராவது வந்து என்னிடம் அவர் சிங்கிள் என்று சொன்னால், அவர்களுக்கு பிரியாணி இலவசம் என்றார்.

என்ன மனுஷன்!!!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?