பாம்பு Twitter
இந்தியா

காதுக்குள் புகுந்த பாம்பு; அலறும் சிறுமி - வைரலாகும் திக் திக் வீடியோ

Antony Ajay R

மிக சிறிய அளவிலான பாம்பு ஒன்று ஒருவரின் காதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அவர் வலியால் துடித்துக்கொண்டிருக்க, மருத்துவர் அவரது காதிலிருந்து பாம்பை எடுக்க முயற்சி செய்கிறார்.

சமூக வலைத்தளங்களில் நாம் தினமும் பலவகையான வீடியோக்களைப் பார்த்து வருகிறோம். வினோதமான வீடியோக்களின் வரிசையில் இந்த வீடியோ சமீப காலமாக வைரலாகி வருகிறது. சந்தன் சிங் என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியாகியிருக்கிறது.

இதில் ஒரு சிறுமியின் காதில் மஞ்சள் நிற பாம்பு லேசாக எட்டிப்பார்க்கிறது. பாம்பின் உடல் முழுவதுமாக சிறுமியின் காதுக்குள் இருக்கிறது. சிறுமி வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார். மருத்துவர் சிறிய கருவியைக் கொண்டு பாம்பை வெளியில் எடுக்க முயற்சிப்பது தெரிகிறது. எனினும் பாம்பு இறுக்கமாக அமர்ந்துள்ளது. பாம்பு நெளிவது சிறுமிக்கு வலியை ஏற்படுத்தும் என்பதனால் மருத்துவர் கவனமாக முயற்சி செய்து வருகிறார். இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

காதில் பாம்பு புகுந்திருக்கும் சிறுமி சரியாக மருத்துவ மனைக்கு வந்ததை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் இந்த வீடியோ முடியும் வரை பாம்பை வெளியில் எடுக்காததால் கவலை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவுமில்லை. பேஸ்புக் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரிலும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?