Vijay Deverakonda Twitter
இந்தியா

Vijay Deverakonda: சொந்த செலவில் 100 பேரை சுற்றுலாவுக்கு அனுப்பும் நடிகர் - எங்கே?

Keerthanaa R

சொந்த செலவில், தனது ரசிகர்கள் நூறு பேரை மணாலிக்கு 5 நாள் சுற்றுலாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் தேவரகொண்டா. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமடைந்தார். அதன் பிறகு முன்னணி கதாநாயகனாகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.

இவர் தற்போது தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றைக் கொடுத்துள்ளார். விரைவில், சொந்த செலவில், தனது ரசிகர்கள் 100 பேரை மணாலிக்கு அனுப்பிவைக்கவுள்ளார் விஜய். தனது ”தேவர சான்டா” முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இதனை அவர் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்

ஆண்டுதோரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இந்த ”தேவர சான்டா” முன்னெடுப்பின் வாயிலாக தன் ரசிகர்களுக்கு பரிசுப் பொருட்கள், பரிசுத் தொகைகளை அவர் வழங்கிவருகிறார். கடந்த 5 வருடங்களாக இதனை செய்து வருகிறார் நடிகர்

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தன் ரசிகர்களில் நூறு பேரை தேர்ந்தெடுத்து அவர்களை 5 நாள் வெகேஷனுக்கு அனுப்பவுள்ளார்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து வீடியோ மூலமாக அறிவிப்பைக் கொடுத்திருந்தார் விஜய். இந்த பயணத்தில், உணவு, பயணச்செலவு, தங்குமிடம் அனைத்தும் விஜய்யின் செலவில் மேற்கொள்ளப்படும்.

ரசிகர்களிடம் ஒரு முறை இவர் தங்களுக்கு எங்கு செல்லவேண்டும் என தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டபோது, பெரும்பாலானோர் மலைப்பிரதேசங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், இந்த இடத்தை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

கோவில்கள், மடாலயங்கள் உட்பட, நிறைய அட்வென்ச்சர் நிறைந்த ட்ரிப்பாக இது இருக்கும் எனக் கூறியுள்ளார் நடிகர். இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நிச்சயம் 18 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்பதே ஒரே ஒரு விதிமுறை.

பயணத்தை மேற்கொள்ள விரும்பும் ரசிகர்கள் தங்களது தகவல்களை அவருக்கு அனுப்பிவைத்தால், அதிலிருந்து நூறு பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் 5 நாட்கள் மணாலிக்கு சென்று வரலாம்.

இந்த தேவர சான்டா முன்னெடுப்பு மூலம், கடந்த ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட சில ரசிகர்களுக்கு இவர் ரூ.10000 பரிசு தொகை வழங்கியிருந்தார். அதற்கும் முன்னர் ஒரு முறை 50 பேரை ஹைதராபத்திற்கு அனுப்பிவைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?