Snake Twitter
இந்தியா

கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் முதுகு மேலேறி படம் எடுத்த நாக பாம்பு | Viral Video

Priyadharshini R

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். கண்ணில் பாம்பை கண்டால் தெறித்து ஓடுபவர்களும் இருக்கிறார்கள், அதே பாம்பை தன் கையால் அசால்டாக பிடிப்பவர்களும் இருக்கிறார்கள்

அப்படி நாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கட்டிலில் புரண்டு படுத்திருக்கும் பெண்ணின் முதுகு மேலேறி நாக பாம்பு படம் எடுத்தபடி நிற்கிறது.

எந்த நேரத்திலும் தீண்டலாம் என்ற சூழலில், மர நிழலில் படுத்திருந்த பெண் மீது சிறிது நேரம் நின்று பார்த்தபடி இருக்கிறது. ஆனால் அந்த பெண்ணோ அப்படியே படுத்திருக்கிறார். எனினும் சில நிமிடங்களில் நாக பாம்பு இறங்கி சென்று விட்டது.

இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர், நிச்சயம் இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து இருப்பேன் என சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பெண் சிவனின் நாமம் உச்சரித்து கொண்டு இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?