சாலையில் கிடந்த மலைப்பாம்பை அசால்டாக வீசும் நபர்- IFS அதிகாரி பகிர்ந்த திக் திக் வீடியோ! Pixabay
இந்தியா

சாலையில் கிடந்த மலைப்பாம்பை அசால்டாக வீசும் நபர்- IFS அதிகாரி பகிர்ந்த திக் திக் வீடியோ!

Antony Ajay R

விலங்களை அனைவருக்கும் பிடிக்கலாம். வீட்டில் நாம் வளர்க்கும் நாய், பூனைகளைத் தூக்கிக் கொஞ்சுவோம் ஆனால் மற்ற விலங்குகளை படத்திலும் ஜூவிலும் பார்ப்பதோடு சரி.

இந்த விலங்குகளிலேயே மிகவும் சபிக்கப்பட்ட ஒன்று பாம்புகள். பாம்புகள் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பயம் மட்டுமே. பாம்பைப் பார்த்தால் உடனே அடித்துக் கொல்லும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது. பாம்புகள் மீது எந்த வித இரக்கமும் காட்டப்படாமல் இருப்பதற்கு காரணம் அதன் மீதான பயம் தான். இந்த பயம் கொஞ்சமும் இல்லாத ஒருவரின் செயல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "நீங்கள் அவர்கள் வாழ்விடத்துக்குச் சென்று தேவையே இல்லாமல் அவைகளை தொந்தரவு செய்கிறீர்கள். உண்மையான விலங்கை அடையாளம் காணுங்கள்" என தலைப்பிட்டிருந்தார்.

மேலும். "விலங்குகளுக்கு தான் ஒரு பாதையில் செல்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவற்றிடம் இருந்து விலகியிருக்கவும். அவற்றைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது.

மனிதர்கள் வனப்பகுதிகளில் விலங்குகளிடம் நடந்துகொள்வது போல, விலங்குகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பதில்லை." என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகர்ஹோல் புலிகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டது.

வீடியோவில் இருப்பது ஓர் மலைப் பாம்பு இவற்றுக்கு விஷம் கிடையாது. சில நாடுகளில் மலைப் பாம்புகளை வீட்டில் செல்லபிராணிகளாகக் கூட வளர்க்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?