கேரளா போல உத்தர பிரதேசம் மாறினால் என்னவாகும்? யோகி VS பினராயி விஜயன்

 

NewsSense

இந்தியா

Morning News Wrap : கேரளா போல உத்தர பிரதேசம் மாறினால் என்னவாகும்? யோகி VS பினராயி விஜயன்

NewsSense Editorial Team

யோகி VS பினராயி விஜயன்


உத்தர பிரதேசம் கேரளா போல ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், கேரள முதல்வர் யோகி யோகிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் கேரளாவாக மாறினால் நல்ல கல்வியும், சுகாதார சேவைகளும் கிடைக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தேர்தலின் போது நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போல உத்தரப்பிரதேசம் மாற அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாது. இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அந்த காணொளியில் கூறி இருந்தார்.

இந்த சூழலில், யோகியின் பேச்சுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

பினராயி விஜயன் தன்னுடைய ட்விட்டரில் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு, ''யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும். சுகாதார சேவைகள் மேம்படும்.

கேரளாவைப் போல மாறினால, அங்கு சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லி

ணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள். அதுபோன்றதைத்தான் உத்தரப்பிரதேச‌ மக்களும் உண்மையில் விரும்புவார்கள்'' என்று தன்னுடைய ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார் பினராயி விஜயன்.

நேரு

நேருதான் இதற்கும் காரணம் : பா.ஜ.க எம்பி குற்றச்சாட்டு

மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் பேசினார்.

அவர்,“ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதுதான் கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை சீனாவிடம் இழந்தோம். இழந்த பகுதி அப்படியே உள்ளது. அதன் பிறகு ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்கவில்லை. நேரு காலத்தில் இழந்த அக்சய் சின் பகுதியை மீட்போம் என்று 1962 முதல் 2019-வரை ஒரு தேர்தல் அறிக்கையில் கூட காங்கிரஸ் கூறாதது ஏன்? சீனாவுக்கு பயப்படுகிறீர்களா? நேருவின் நற்பெயர் பாதிக்கப்படும் என்று அச்சமா? எல்லை களின் பாதுகாப்பிலும் அ்ந்தப் பகுதிகளின் முன்னேற்றத்திலும் பாஜக அரசு அக்கறை கொண்டுள்ளது,” என்று கூறினார்.

Nandhukumar

கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் புது மாஸ்க்

இந்திய விஞ்ஞானிகள் குழு கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை அழிக்கும் படியும், எளிதில் மக்கக்கூடியதுமான புதுவகை மாஸ்க் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளனர்.

முகக்கவசம் அணிவது வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான மற்றும் பயனுள்ள சுகாதார நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்நிலையில் கொரோனாவை செயலிக்க செய்யும் விதமாகவும், எளிதில் மக்கும் தன்மை கொண்டதாகவும் புது வகை கொரோனா மாஸ்க் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ள புதிய முகக்கவசத்தை தொடும் கொரோனா வைரஸுக்கு எதிராக தீவிர எதிர்வினையாற்றும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?