இந்த ஆண்டு நாம் அதிகம் சாப்பிட்ட உணவுகள் என்ன? - ஸ்விக்கி வெளியிட்ட தகவல்! பிரியாணி
இந்தியா

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் : பிரியாணிக்கு முதலிடம் - அடுத்தது என்ன தெரியுமா?

இந்த பட்டியலின் மூலம் தொடர்ந்து 7வது ஆண்டாக பிரியாணி இந்தியர்களின் விருப்ப உணவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் நொடியில் கூட 2.2 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

Antony Ajay R

இந்தியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது பிரியாணி.

உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 2022ம் ஆண்டு அதில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இந்த பட்டியலின் மூலம் தொடர்ந்து 7வது ஆண்டாக பிரியாணி இந்தியர்களின் விருப்ப உணவாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

அதாவது, நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் நொடியில் கூட 2.2 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன.

பிரியாணி ஒரு ஆடம்பர உணவு என்பது நாம் அறிந்தது. இதற்கு முரணாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் மசாலா தோசை.

ஸ்நாக்ஸ்

உணவுகளின் வரிசை இப்படியிருக்க சமோசா இந்த ஆண்டு நம் நாக்குகளை கட்டிப்போட்ட ஸ்நாக்காக இருக்கிறது. மொத்தமாக 40 லட்சத்துக்கும் அதிகமான சமோசாக்களை நாம் தின்று செரித்திருக்கிறோம்.

அடுத்த இடத்தில் பாப்கார்ன் இருப்பது தான் வினோதமே... ஓடிடிகளின் வருகையால் நம் வீடுகள் திரையரங்குகளாக மாற்றப்பட்டட்டு விட்டன என்பதனால் பாப்கார்னும் விற்கப்பட்டிருக்கிறது.

உண்மை தான் மொத்தமாக 20 லட்சம் பாப் கார்ன்கள் விற்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் தான் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

இந்தியர்கள் மத்தியில் வெளிநாட்டு உணவுகளை ஆர்டர் செய்யும் பழக்கமும் அதிகரித்திருப்பதாக ஸ்விக்கி தரவுகள் கூறுகின்றன.

அதிகமாக விரும்பப்பட்ட ஸ்வீட்டாக குலொப் ஜாமூன் 27 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டாவது இடத்தில் ரசமலாயும் அதைத்தொடர்ந்து சாக்கோ லாவா கேக்கும் இடம் பெற்றிருக்கின்றன.

ஸ்விக்கியின் உறுப்பினராக இருப்பதன் மூலம், ஸ்விக்கி ஒன் பயன்படுத்துவதன் மூலமாகவும் அதிக பணம் சேமித்தவர்களில் முதலிடம் பிடிக்கின்றனர் பெங்களூரு வாசிகள்.

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த 35 லட்சம் பேர் அதன் டெலிவரி ஊழியர்களுக்கு 53 கோடி ரூபாய் டிப்ஸ் கொடுத்துள்ளனர். இது முழுவதுமாக டெலிவரி ஊழியர்களுக்கே சென்று சேரும் என ஸ்விக்கி கூறியுள்ளது.

ஜனவரி 2022 முதல் நவம்பர் 2022 வரையிலான தரவுகளைக் கொண்டு இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?