What makes these Indian hill stations iconic? canva
இந்தியா

இந்தியாவின் இந்த 7 ஐகானிக் மலைவாசஸ்தலங்களுக்கு சென்றிருக்கிறீர்களா?

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் மலைவாசஸ்தலங்களுக்கு ஏன் நிச்சயம் செல்ல வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

Priyadharshini R

பெரும்பாலான மக்கள்விடுமுறை நாட்களில் மலை பிரதேசங்களுக்கு செல்வதையே விரும்புகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் ஐகானிக் மலை வாசஸ்தலங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிம்லா, இமாச்சல பிரதேசம்

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் சிம்லா, டிசம்பரில் பிரமிக்க வைக்கும் வகையில் காட்சியளிக்கும்.

கடல் மட்டத்திலிருந்து 2,200 மீ உயரத்தில் அமைந்துள்ள சிம்லா ஒரு பிரபலமான மலை நகரமாகும்.

பனி மூடிய மலைத்தொடர்களின் பரந்த காட்சிகளை நீங்கள் ரசிக்கலாம். டிசம்பரில் இங்கு பனிப்பொழிவு ஏற்படுகிறது.

மறக்கமுடியாத அனுபவத்தை பெற சிம்லா ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமாகும்.

டார்ஜிலிங், மேற்கு வங்காளம்

டார்ஜிலிங்கில் இருக்கும் தேயிலை தோட்டங்கள், கஞ்சன்ஜங்கா மலையின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான டார்ஜிலிங் சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக இருக்கிறது.

Ooty

ஊட்டி, தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலை வாசஸ்தல நகரம்தான் ஊட்டி.

இங்கு சீறிப்பாயும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல இடங்கள் உள்ளன.

அது மட்டுமில்லாமல் படகு சவாரி, மலையேற்றம் என சாகச பிரியர்களுக்கும் ஏற்ற இடமாக உள்ளது.

மணாலி

மணாலி, இமாச்சல பிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தின், குல்லு மாவட்டத்தில் உள்ள நகரம் தான் மணாலி.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று செல்லப்பெயர் பெற்ற மணாலி இந்தியாவின் செழிப்பான பழத்தோட்டத் துறையின் மையமாகவும் உள்ளது. பனிமலைகளாலும் உயர்ந்த சிகரங்களாலும் சூழப்பட்டுள்ளது. பழமையான ஹடிம்பா கோவில், திபெத்திய மடாலயம் மற்றும் கந்தக நீரூற்றுகள் நிச்சயம் பார்க்க வேண்டியவை.

நைனிடால், உத்தரகாண்ட்

நைனிடால், அழகான ஹிமாலயன் ஏரி நகரமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 மீ உயரத்தில் குமாவோன் இமயமலையில் அமைந்துள்ளது. ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம்.

நைனிடால் ஆண்டு முழுவதும் செல்லக்கூடிய இடமாகும். ஆனால் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வானிலை சிறப்பாக இருக்கும்

மூணாறு, கேரளா

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் அமைந்துள்ள மூணாறு முதிரப்புழ, நல்லதண்ணி, மற்றும் குண்டலா என்னும் மூன்று மலைகள் இணைப்பில் எழுந்துள்ளது. கடல் மட்டத்திற்கு மேலே 1,600 கி.மீ. இருக்கும் இந்த மலைவாசஸ்தலம், பரந்த தேயிலைத் தோட்டங்கள், முறுக்குப் பாதைகள் என பல விஷயங்களை கொண்டுள்ளது.

கொடைக்கானல்

கொடைக்கானல், தமிழ்நாடு

கொடைக்கானல் கோடை விடுமுறைக்கு பிரபலமான வாசஸ்தலமாகும்.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் ஆண்டுமுழுவதும் மக்கள் இங்கு வருகை தருகின்றனர். ஏரி, நீர்வீழ்ச்சி புல்வெளிகள் ஆகியவற்றில் நடப்பதும், மிதிவண்டியில் செல்வதும், குதிரைகளில் செல்வதும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான தேர்வாக உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?