சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தக்கூடிய வலைத்தளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.
உலகம் முழுவதும் 2.20 பில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.
தனிமுறை மட்டுமல்லாமல் அலுவலக பணிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்கள் என பலவற்றை வாட்ஸ் அப் மூலம் பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் வசதி இதில் உள்ளது.
வாட்ஸ் அப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் தரவுகள் குறித்த பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் 50 கோடி வாட்ஸ் அப் பயனர்களின் செல்போன் எண்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சைபர்நியூஸ் அறிக்கையின்படி
487 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி மற்றும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளைச் சேர்ந்த பயனர்களை உள்ளடக்கிய 2022 ஆம் ஆண்டின் தரவுத்தளத்தில் இந்தத் தனிப்பட்ட தரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது வரை சைபர்நியூஸ் அறிக்கைக்கு மெட்டா நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust