Husband - Wife Canva
இந்தியா

மனைவி வீட்டில் இல்லாதபோது... கணவன் செய்யும் 5 விஷயங்கள்!

வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் சில பொருட்களைப் புதிதாகக் கணவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். சிலர் தங்களின் பழைய காதலிகளுடன் கூட உரையாடுவார்கள்.

Priyadharshini R

பொதுவாகவே திருமணத்திற்குப் பிறகு ஆண் பெண் என இருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அவ்வகையில் ஆண்கள் பல மாற்றங்களை தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பர். ஆனால் மனைவி ஊருக்குப் போனால் சில விசித்திர விஷயங்களை அவர்கள் செய்வார்கள். அதுபோல அவர்கள் செய்யும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கழிவறையில் நீண்ட நேரம் செலவிடுவது

மனைவிகள் வீட்டில் இல்லை என்றால் பல கணவர்கள் விசித்திரமாக நடந்து கொள்வார்கள். வழக்கத்திற்கு மாறாக அவர்கள் குளியலறையிலும் கழிவறையிலும் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்.

சிலர் மொபைல்களை தங்கள் கழிவறைக்கு கொண்டு செல்வார்கள். சிலர் லேப்டாப் மற்றும் டேப்களைக் கொண்டு செல்வர். இவ்வாறு சிலர் கழிவறைகளில் தங்கள் நேரத்தை வழக்கத்திற்கு மாறாக அதிகம் செலவிடுவார்கள்.

பழைய நண்பர்களுடன் போனில் பேசுவது

திருமணத்திற்குப் பிறகு பொறுப்புகள் கூடிய காரணத்தினால் ஆண்கள் தங்களுடன் பழகிய பழைய நண்பர்களிடம் பேசக்கூட நேரமில்லாமல் இருப்பார்கள். ஆனால் மனைவி ஊருக்கு செல்லும் அந்த சமயத்தில் தங்கள் பழைய நண்பர்களுடன் அதிகம் போனில் உரையாடுவார்கள். சிலர் தங்களின் பழைய காதலிகளுடன் கூட உரையாடுவார்கள்.

தொலைக்காட்சி பார்ப்பது

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் பெண்களே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள். இந்த காரணத்தினால் ஆண்கள் மனைவிகள் வீட்டில் இருக்கும்போது தொலைக்காட்சியில் நாட்டம் இல்லாதது போல் இருப்பார்கள். அதே சமயத்தில் மனைவிகள் ஊருக்கு சென்றால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பார்கள்.

party

நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடுவது

சில ஆண்கள் மனைவி ஊருக்கு சென்ற சமயத்தில் தங்கள் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொண்டாடுவார்கள். ஆனால் இது பெரும்பாலும் வெகு நாட்களுக்கு மனைவி வெளியூருக்கு சென்றால் மட்டுமே நடக்கும். அவ்வாறு பார்ட்டி கொண்டாட்டத்தில் நன்கு மகிழ்ந்து இருப்பார்கள்.

cooking

சமையலில் புதிதாக ஏதாவது செய்வது

பெண்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்தால் சமையலறை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால் பல ஆண்களுக்கு சமைப்பது மிகவும் பிடித்த விஷயமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் கணவர்கள் மனைவிகள் ஊருக்கு செல்லும் நேரத்தில் புதிதாக ஏதேனும் சமைத்து உண்பார்கள்.

வீட்டில் உள்ள சில பொருட்களை கவனிப்பது

பல வருடங்களாக வீட்டில் இருந்தால் கூட மனைவிகள் இருக்கும் அந்த நேரத்தில் பெரிதாக வீட்டில் இருக்கும் பொருட்களை சில கணவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால் வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் சில பொருட்களைப் புதிதாகக் கணவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?