Gama Pehlwan : ப்ரூஸ் லீயின் ரோல்மாடலான இந்தியர்; இந்துக்களை காத்த முஸ்லீம் - யார் இவர்?  Twitter
இந்தியா

Gama Pehlwan : ப்ரூஸ் லீயின் ரோல்மாடலான இந்தியர்; இந்துக்களை காத்த முஸ்லீம் - யார் இவர்?

Antony Ajay R

இந்தியாவின் அடையாளமாக இருந்த பல முகங்கள் இப்போது நம் நினைவில் இல்லை.

வரலாற்றில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மனிதர்கள் ஏராளம் புதைந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர் காமா பயில்வான்.

இவர் பஞ்சாம் மாநிலம் அம்ரித்சரில் 1878ல் பிறந்தவர்

பாரம்பரிய மல்யுத்த குடும்பத்தில் பிறந்த இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் குலாம் முகமது பக்ஷ் பட்.

இவரை காமா பயில்வான் என்றும் தி கிரேட் காமா என்றும் அழைத்தனர்.

இந்த பெயர் தான் அன்றைக்கு மல்யுத்த உலகை நடுங்க வைத்தது.

இந்த பெயர் தான் சர்வதேச அளவில் இந்தியர்களின் வீரத்தை பறைசாற்றியது.

சிறு வயதில் கிடைத்த புகழ்

ரஸ்டன் - இ - ஹிண்ட் (இந்திய சாம்பியன்) பட்டத்தை வைத்திருந்த ரஹீம் பக்ஷ் சுல்தானிவாலா உடன் தனது பதின் பருவத்திலேயே மோதினார் காமா.

சுல்தானிவாலா 7 அடி உயரம் இருப்பவர். அவரை விட அவரது அனுபவம் உயர்ந்தது.

அந்த சாம்பியனை 5.7 அடி மட்டுமே உயரமான கத்துகுட்டி காமா போட்டியில் ட்ரா செய்தார்.

இதனால் காமாவின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

அந்த ஆக்ரோஷமான சண்டையைப் பார்த்தவர்கள் அப்போதே காமா மிகப் பெரிய சாம்பியனாக வருவார் என கணித்தனர்.

20களிலே 100 கிலோ எடையை அசால்டாக தூக்கும் பலம் கொண்டிருந்தார் காமா.

யாரும் முடியாது எனக் கூறிய 1200 கிலோ எடை கொண்ட பாறை தூக்கி நிறுத்தினார். இன்றும் அந்த பாறை வடோதரா மியூசியத்தில் இருக்கிறது.

உலக சாம்பியன் காமா

உள்ளூர் போட்டிகளில் யாரும் 1 நிமிடம் கூட காமாவின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை.

110 கிலோ எடைகொண்ட அவரை அசைத்துப்பார்க்க யாராலும் முடியாது என்கிற செய்தி காற்றில் பரவ, சர்வதே நிகழ்வுகளில் கலந்துகொள்ள காமாவுக்கு அழைப்புகள் வந்தது.

ரஸ்டன் - இ - சமனா கோப்பைக்கான உலக அளவிலான போட்டி லண்டனில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட காமா, ஸ்டனிசலஸ் பிஸ்கோ, ஃப்ரான்க் கோட்ச், பெஞ்சமின் ரோல்லெர் என கொடிகட்டிப் பறந்த பெரும்புள்ளிகளை சாய்த்தார்.

அடுத்தடுத்த கடல் கடந்த போட்டிகளில் அவர் புகழ் வளர்ந்தது. உலக சாம்பியன் ஜெஸ்ஸி பீட்டர்சனை தோற்கடித்த போது அவர் புகழின் உச்சத்தில் இருந்தார் என்றே கூறலாம்.

மிக சிறுவயதில் மல்யுத்தத்தைத் தொடங்கி 74 வயது வரை மல்யுத்த களத்தில் நின்றார் காமா.

52 ஆண்டுகள் தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்த காமா தோல்வியே அறியாதவராக விளங்கினார்.

அவரது ஓய்வின் போது தான் சந்தித்ததிலேயே கடுமையான போட்டியாளர் சுல்தானிவாலா தான் என்றார்.

இந்துக்களின் உயிரைக் காத்தார்

1947ல் காமா லாகூரில் குடியேறி வசித்து வந்தார். இத்தனைப் புகழையும் கடந்து அவர் மக்களால் மதிக்கப்பட காரணம் இருக்கிறது.

எல்லைப் பிரிவினையின் போது லாகூரின் மோனி பகுதியில் வசித்த இந்துக்களுக்கு ஆபத்து நேர்ந்தது.

அதிகப்படியான கலவரங்கள் வெடித்த போதும் அவர்களுடன் நட்புறவு பாராட்டினார்.

இந்துக்களின் உயிரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்தார்.

அதன் படி கலவரம் தீவிரமடைந்த போது மக்களை எல்லைக்கு அருகில் இடம் பெயரச் செய்ததுடன் அவர்களின் உணவுத் தேவையையும் பார்த்துக்கொண்டார்.

ப்ரூஸ்லியின் ரோல்மாடல்

காமா அவரது ஆக்ரோஷமான சண்டையை விட அவரது சரியான உணவு முறைக்கும், கடுமையான உழைப்புக்கும் அறியப்பட்டார்.

இதுவே ப்ரூஸ்லி அவரை ரோல்மாடலாக ஏற்கவும் காரணம்.

பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்த போது காமாவின் வீரத்தைப் பாராட்டி வெள்ளி கதாயுதத்தை பரிசாகக் கொடுத்தார்.

தமிழ் சினிமாவில் காமா

80, 90களின் தமிழ் சினிமாவில் பல பயில்வான்களில் இவரது சாயலைக் காணலாம்.

பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தில் பயில்வானாக வரும் கல்லாப்பெட்டி சிங்காரம் தன்னை காமா பயில்வானின் சிஷ்யன் என அறிமுகம் செய்துகொள்வார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?