Why are school buses yellow in colour? Twitter
இந்தியா

பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளன? அறிவியல் கூறும் காரணம் என்ன?

Priyadharshini R

பொதுவாக பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போன்று அளிக்கப்படும் நிறங்களுக்கு சில அர்த்தங்களும் முக்கியத்துவங்களும் உண்டு.

பெரும்பாலான பள்ளிப் பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் பயன்படுத்தப்படுகின்றன? இதற்கு பின்னால் ஏதாவது அறிவியல் காரணம் உள்ளதா? இங்கே தெரிந்து கொள்வோம்.

மஞ்சள் நிறம் மட்டும் ஏன்?

தொலைவில் இருந்து கூட நம்மால் மஞ்சள் நிறத்தை மிக எளிதாக காண முடியும். மழை, மூடுபனி ஆகிய சூழல்களிலும் கூட மஞ்சள் நிறத்தை நாம் தொலைவில் இருந்து எளிதாக பார்க்க முடியும்.

அதுமட்டுமல்லாது, பல்வேறு நிறங்களை நாம் ஒன்றாக பார்க்கும்போது, மஞ்சள் நிறம்தான் நமது கவனத்தை முதலில் ஈர்க்க கூடியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,

மஞ்சள் நிறத்தின் பக்கவாட்டு புற பார்வை (Lateral Peripheral Vision), சிகப்பு நிறத்தை காட்டிலும் 1.24 மடங்கு அதிகமானது.

தலையை திருப்பாமல் அல்லது கண்களை நகர்த்தாமல் நம்மை சுற்றி உள்ள பொருட்களை பார்க்க கூடிய நிலைதான் புற பார்வை என கருதப்படுகிறது.

சரியாக சொல்லவேண்டும் என்றால், ஒரு பொருளை நேராக பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்களால் சைடில் இருக்கும் மஞ்சள் நிறத்தை எளிதாக காண முடியும்.

நேருக்கு நேராக பார்க்கவில்லை என்றாலும் கூட பக்கவாட்டில் மஞ்சள் நிற வாகனம் வந்து கொண்டிருப்பதை உங்களால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.

இதன் காரணமாகதான் பள்ளி பேருந்துகளில் மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் சாலை விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது. எனவே குழந்தைகள் வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டிற்கும் பாதுகாப்பாக சென்று வர முடியும்.

1930 களின் முற்பகுதியிலேயே அமெரிக்காவில், மற்ற வண்ணங்களை விட மஞ்சள் நிறத்தில் அதிக ஈர்ப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் சில சிக்னல் போர்டுகள் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?