​Why consuming curd is forbidden in Monsoon traditionally Twitter
இந்தியா

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடக்கூடாதா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?

Priyadharshini R

நம்மில் பலருக்கு தினமும் தயிர் சாப்பிடும் வழக்கம் இருக்கும், ஏதாவது ஒரு வழியில் அதனை சேர்த்து சாப்பிட்டு விடுவோம். ஆனால் அந்தகாலத்தில் தயிர் சாப்பிடுவது பாரம்பரியமாக தவிர்க்கப்பட்டு வந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தயிருக்கு எல்லாமா தடை என்று யோசிக்கிறீர்களா?

ஒருவேளை நீங்கள் தினமும் தயிர் சாப்பிடும் நபராக இருந்தால், அதற்கு பிரேக் கொடுக்கும் நேரம் தான் இது! ஏன் மழைகாலத்தில் தயிர் சாப்பிடக்கூடாது? தயிர் சாப்பிடுவதற்கான சரியான வழி என்ன? என்பதையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

ஆயுர்வேதத்தின்படி, மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் ஒரே நேரத்தில் பாதிக்கலாம்.

குறிப்பாக இந்த பருவத்தில் தயிர் சாப்பிட்டால் வாதம் மற்றும் பித்தம் ஆகிய இரண்டு தோஷங்கள் தூண்டப்பட்டு, பல பருவகால நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதனால் உடல் பாதிப்படைகிறது.

தயிர் நமது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதனால், செரிமானத்தை வலுவிழக்கச் செய்து, வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

இதன் காரணமாகவே தயிருடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு, வறுத்த சீரகம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை சேர்க்காமல் சாப்பிடும் பொழுது நமது செரிமான செயல்முறை குறைகிறது.

மழைக்காலத்தில் தொடர்ந்து தயிர் சாப்பிடுவதால் உடலில் இருக்கக்கூடிய சளி அதிகரிக்கும். இதனால் இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல், பொதுவாக மழைக்காலத்தில் எப்பொழுதும் காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் என்பதால் இது ஏராளமான நோய்கள் மற்றும் அலர்ஜிகளை ஏற்படுத்தும்.

ஆயுர்வேதத்தின்படி, தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை, மழைக்காலத்தில் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

குளிர்ந்த ஆற்றல் கொண்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் சளி உருவாவதை அதிகரிக்கும், உடல் மிகவும் சோர்வானதாக காணப்படும். இதனால் பருவ கால நோய்கள் நம்மை எளிதாக தாக்குகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?