Why Doctors Wear Green Clothes While Performing Surgery Twitter
இந்தியா

அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் ஏன் பச்சை நிற ஆடைகளை அணிகிறார்கள்?

Priyadharshini R

மருத்துவமனையில் மருத்துவர்கள் வெள்ளை நிற கோட் அணிந்திருப்பார்கள். ஆனால் அறுவைசிகிச்சைக்கு சற்று முன்பு, மருத்துவர்கள் பச்சை நிற ஆடைகளில் தயாராகி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஏன் பச்சை, வேறு எந்த நிறமும் இல்லையா? என்றெல்லாம் சில சமயங்களில் யோசித்திருப்போம்.

மருத்துவர்கள் பச்சை நிற ஆடைகளில் வருவதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

வெளிச்சம் நிறைந்த இடத்திலிருந்து இருண்ட அறைக்குள் நுழையும் போது, பச்சை அல்லது நீல நிறம் உங்களை ஃபோக்கஸ்டாக உணர வைக்கும்.

அறுவை சிகிச்சையின் போது, நிபுணரின் கவனம் பெரும்பாலும் சிவப்பு நிறங்களின் மீதே இருக்கிறது. துணியின் பச்சை மற்றும் நீல நிறங்கள் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் பார்வை திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிவப்பு நிறத்தை அதிகம் ஃபோக்கஸ் செய்ய உதவுகிறது.

அறிக்கையின் படி, பச்சைத் துணி அறுவை சிகிச்சையின் போது கண்ணுக்கு சிறிது ஓய்வு அளிக்கிறது.

அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்கள் நீலம் மற்றும் வெள்ளை சீருடைகளையும் அணிவார்கள். ஆனால் இரத்தப் புள்ளிகள் பழுப்பு நிறத்தில் தோன்றுவதால், பச்சை நிறத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

முன்பிருந்தே இந்த பழக்கம் பின்பற்றப்பட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

கடந்த காலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வெள்ளை சீருடை அணிந்திருந்தனர். ஆனால் ஒரு மருத்துவர் அதை 1914 இல் பச்சை நிறமாக மாற்றினார். அன்றிலிருந்து, இந்த ஆடை பிரபலமாகிவிட்டது. இப்போதெல்லாம், சில மருத்துவர்கள் நீல நிற ஆடைகளையும் அணிகிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?