கர்நாடகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது பயணிகளிடம் கடுமையாகும் வாதிடும் வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் "நான் கன்னத்தில் தான் பேசுவேன், இந்தியில் அல்ல" என வாதிடுகிறார் அந்த ஓட்டுநர்.
இந்த வீடியோவை @anonymous_7461 என்ற ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.
அதில், "வட இந்தியர்கள் - பிச்சைக்காரர்கள், நம் நிலம்" எனத் தலைப்பிட்டுள்ளார்.
மேலும், "மேலே இருப்பது ஆட்டோகாரர் உபயோகப்படுத்திய வார்த்தைகள். இதி அவர் மட்டுமல்ல எல்லா மக்களின் மனநிலையும் கூட. பெருமைமிக்க கன்னடராக இருப்பதற்கும் மற்றவர்களை கன்னடம் பேச வற்புறுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது" என அந்த ட்விட்டர் கணக்கு குறிப்பிட்டிருந்தது.
அந்த வீடியோவில், "இது கர்நாடகா, நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும்." என அந்த ஆட்டோ டிரைவர் கூறுகிறார்.
ஆனால் அந்த பெண்கள், "நாங்கள் கன்னடத்தில் பேச மாட்டோம், நாங்கள் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும்?" எனக் கேட்கிறார்.
அந்த ஆட்டோ டிரைவர், "நீங்கள் வட மாநிலத்தவர்கள், இது எங்கள் நிலம், நீங்கள் தான் கன்னடத்தில் பேச வேண்டும், நான் ஏன் இந்தியில் பேச வேண்டும்." எனக் கேட்கிறார்.
மாநில மொழிகளுக்கும் இந்திக்கும் இடையிலான போரானது நாளுக்கு நாள் பரவலாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசியல்வாதிகள் தொடர்ந்து இந்திக்கு எதிராக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust