தெருநாய்கள் கடிக்கு யார் பொறுப்பு? சட்டம் என்ன சொல்கிறது?  Twitter
இந்தியா

தெருநாய்கள் கடிக்கு யார் பொறுப்பு? சட்டம் என்ன சொல்கிறது?

2019 ஆம் ஆண்டில், நாட்டில் 4,146 பேர் நாய் கடித்ததால் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1.5 கோடிக்கும் அதிகமான நாய் கடி வழக்குகள் உள்ளதாக தரவு காட்டுகிறது.

Priyadharshini R

தெருவோரங்களில் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. சில சமயங்களில் இந்த தெருநாய்களால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என பாகுபாடு பார்க்காமல் தெருநாய்கள் தாக்குகின்றன.

ஏன் தெருநாய்கள் தாக்குகின்றன, நாய்கள் தொடர்பாக சட்டங்கள் என்ன சொல்கின்றன, அத்தகைய தாக்குதல்களுக்கு யார் பொறுப்பேற்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தெருநாய் தாக்குதலுக்கு என்ன காரணம்?

இந்தியாவில் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு சரியான வழிமுறை இல்லை. விலங்குகளுக்கென கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சரியானதாக இல்லாததால், மனிதர்களை விலங்குகள் அவ்வபோது தாக்குகிறது.

குறிப்பாக நாய்கள், பராமரிப்பு இல்லாமல் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் உணவுப் பற்றாக்குறையால் மூர்க்கமாக மாறலாம். இதனால் மற்றவர்களை தாக்கலாம். அதனால் தான் தெருநாய்கள் வெறிகொண்டு திரிகின்றன.

தெருநாய் எண்ணிக்கை மற்றும் நாய் கடி வழக்குகள்?

அறிக்கைகளின்படி, நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான நாய்கள் உள்ளன. அதே நேரத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடி.

2019 ஆம் ஆண்டில், நாட்டில் 4,146 பேர் நாய் கடித்ததால் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1.5 கோடிக்கும் அதிகமான நாய் கடி வழக்குகள் உள்ளதாக தரவு காட்டுகிறது.

உத்தரபிரதேசத்தில், 27.52 லட்சம் வழக்குகள், தமிழ்நாட்டில் 20.7 லட்சம் மற்றும் மகாராஷ்டிரத்தில் 15.75 லட்சம் நாய் கடி வழக்குகள் உள்ளன.

தெருநாய் தாக்குதலுக்கு யார் பொறுப்பு?

தெருநாய் தாக்குவதற்கு அரசு மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் அலட்சியமே காரணம் என்கின்றனர்.

தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகள் நல அமைப்புககளின் அணுகுமுறை அலட்சியமாகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் உள்ளதால் இவ்வாறு நடக்கிறது.

அரசாங்கத்தின் புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மையால் லட்சக்கணக்கான நாய்களுக்கு தடுப்பூசி போடாமல் விட்டுவிடுகின்றன. அவை தெருக்களில் வாழ கைவிடப்படுவதால் இதுபோன்ற பிரச்னைகளை உருவாகுகின்றன.

law

தெருநாய்கள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(G) கூற்றுப்படி "வனவிலங்குகளைப் பாதுகாப்பதும், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும்."

2001ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

தெருநாய்களுக்கு உணவளிப்பது எந்த ஒரு சமூகத்திற்கும் சட்டபூர்வமானது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெருநாய்களுக்கு உணவளிக்கலாம் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

இருப்பினும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து நாய்களை அகற்ற முடியாது. விதிகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம், அவர்கள் நாய்களை கருத்தடை செய்ய அழைத்துச் செல்லலாம். ஆனால் அந்த நாய் அழைத்து வரப்பட்ட இடத்திலேயே திருப்பி விட வேண்டும்.

சட்டத்தின்படி, தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது சட்டவிரோதமானது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?